Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : ஏடிகே அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி!!

கொல்கத்தா : கொல்கத்தாவில் பிப்ரவரி 22 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 83 ஆவது கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் ஸ்டேடியத்தில் ஏடிகே அணிக்கும், மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஏடிகே அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - ATK vs Mumbai City FC match no 83 Result

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. முதல் 25 நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் அடிக்க முடியாத அளவுக்கு ஆட்டம் கடுமையாக இருந்தது.

இதையடுத்து ஆட்டத்தின் 26 ஆவது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியின் மொடுகு சோகு அற்புதமாக ஒரு கோல் அடித்தார். பின்னர் 31 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணி அதை நழுவவிட்டது.

ISL 2019 - ATK vs Mumbai City FC match no 83 Result

இதையடுத்து ஆட்டத்தின் 39 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மொடுகு சோகு மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

பின்னர் கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த இரண்டு நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் மும்பை அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019 - ATK vs Mumbai City FC match no 83 Result

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மொடுகு சோகு 3 ஆவது கோலை அடித்தார். பின்னர் 65 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சக்ரபர்த்திக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 67 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஆண்ரி பிக்கி ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 68 மற்றும் 69 ஆவது நிமிடத்தில் மும்பை மற்றும் ஏடிகே அணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019 - ATK vs Mumbai City FC match no 83 Result

இதையடுத்து ஆட்டத்தின் 74 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ப்ரோனேக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 84 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மத்தியாசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 88 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் செனாஜ் சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - ATK vs Mumbai City FC match no 83 Result

இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த நான்கு நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மும்பை சிட்டி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

(Photos Courtesy - ISL)

Story first published: Saturday, February 23, 2019, 10:00 [IST]
Other articles published on Feb 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+