For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பரபரப்பான ஐஎஸ்எல் இறுதிப் போட்டி.. 2019 சீசனின் கோப்பையை வெல்லப்போகும் அணி எது?

மும்பை : கடந்த ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து சீசனில் ஏற்பட்ட தோல்வியை மனதில் ஏற்றி தற்போது ஜெயிக்க வேண்டும் என்ற வெறியுடன் பெங்களூரு எஃப்சி அணியும், எஃப்சி கோவா அணியும் இன்று (மார்ச் 17) மும்பை அரினா அரங்கில் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

ஐஎஸ்எல் கோப்பையை வெல்வதற்காக இரண்டு சிறந்த அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்பும் இந்த இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன. கடந்த சீசனில் பெங்களூரு அணி இறுதிப்போட்டியில் சென்னையின் எஃப்சி அணியிடம் தோல்வி அடைந்தது. இதே போல் கோவா அணி கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இதே சென்னை அணியிடம் தோற்றுப் போனது.

ISL 2019 - Bengaluru FC vs FC Goa finals preview analysis

இந்த சீசனில் முதலிடத்தைப் பிடித்துள்ள பெங்களூரு அணி, இறுதியில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறது. ஆனால் அவர்கள் எதிர்த்து விளையாடப் போவது அபாயகரமான கோவா அணி! ஏற்கனவே கோவா, மும்பை அணியை 5 - 2 என்ற கோல் கணக்கில் பந்தாடியுள்ளது.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரை வீரர்கள் கூட்டாக ஒரு நெருப்பைப் போல் விளையாட காத்திருக்கின்றனர். இந்த சீசனில் முதல் பாதியில் அதாவது இடைவேளைக்கு முன்பு தொடர்ந்து 11 ஆட்டங்களில் தோல்வி அடையாமல் வெற்றியை மட்டுமே அந்த அணி ருசித்தது.

ISL 2019 - Bengaluru FC vs FC Goa finals preview analysis

ஆனால் இடைவேளைக்கும் பிறகான இரண்டாவது தொடர்ச்சியில் அந்த அணி பல சவால்களை சமாளிக்க வேண்டியிருந்தது. அதன் பிறகுதான் அந்த அணி ஐஎஸ்எல் போட்டிகளின் இறுதிக் கட்டத்தை வெற்றிகரமாக அடைந்தது.

ISL 2019 - Bengaluru FC vs FC Goa finals preview analysis

இதனிடையே கோவா அணி இந்தப் போட்டிகளில் 41 கோல்களை அடித்தது. அதே நேரத்தில் கோவா அணிக்காக அதன் பயிற்சியாளர் செர்ஜியோ லோபிரா மிக கடுமையாக உழைத்துள்ளார். ஆனாலும் இந்த சீசனில் பெங்களூரு எஃப்.சி.யை அணியை எதிர்கொண்ட கோவா வீரர்கள் இரு போட்டிகளில் தோல்வியடைந்து ஐந்து கோல்களைக் கைப்பற்றினர்.

ISL 2019 - Bengaluru FC vs FC Goa finals preview analysis

இறுதிப் போட்டிக் களத்தில் பெங்களூரு அணிக்கு இது மனரீதியாக ஒரு உத்வேகத்தைத் தரும்.

எனது அணி வீரர்கள் குறித்து நான் நன்கு அறிவேன். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கில் எங்களது அணி வீரர்கள் உள்ளனர். அவர்கள் அமைதியாக இருந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பமாக உள்ளது. இறுதிப் போட்டிக்காக தங்கள் சிறப்பான ஆட்டத்தை அவர்கள் வழங்குவார்கள். கால்பந்து ஆட்ட வரலாற்றில் இது எப்போதுமே நடக்கும். ஒரு சில வீரர்கள் இந்த ஆட்டத்தில் ஜொலிப்பார்கள். சுனில் ஷட்டரி, குர்பிரீத் சிங், உதாந்தா சிங் போன்ற வீரர்கள் இறுதிப் போட்டியில் ஜொலிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரெட்.

ISL 2019 - Bengaluru FC vs FC Goa finals preview analysis

அதே நேரத்தில் கோவா எந்த வகையிலும் மோசமான அணி கிடையாது என்பதை குவாட்ரெட் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். 19 ஆட்டங்களில் 16 கோல்களை அடித்து அதிக கோல்களை அடித்தவர் என்ற பெருமையைப் பெற்ற ஃபெரான் கொராமினாஸ் கோவா அணியில்தான் உள்ளார். அவருக்கு பந்துகளை அடித்துக் கொடுக்க ஹீகோ, எடு பேடியா ஆகியோர் உள்ளனர். அவர்கள் மூலம் ஃபெரான் கோல் அடிக்க முடியும் என்ற நிலை உள்ளதால் இது ஒரு சிறப்பான குழுவாக கருதப்படுகிறது.

ISL 2019 - Bengaluru FC vs FC Goa finals preview analysis

கோலோஸ் பெனா மற்றும் மௌடடா ஃபால் ஜோடி மைதானத்தின் நடுவில் இருந்து கொண்டு இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடினர். பெங்களூரு அணியைப் போன்று கடினமான ஆட்டத்தைக் கொடுக்கும் வீரர்களுக்கு இவர்கள் இருவரும் சரியான டஃப் கொடுப்பார்கள் என்கிறார் கோவா பயிற்சியாளர் செர்ஜியோ லோபிரா.

ISL 2019 - Bengaluru FC vs FC Goa finals preview analysis

இதற்கு முன்பு நடந்தவைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் இறுதிப் போட்டி கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும். அரையிறுதியில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஆனால் இறுதிப் போட்டி என்பது எங்களுக்கு எதிரான ஆட்டங்களில் பெங்களூரு அணி பல முறை வென்றுள்ளது என்பது உண்மைதான். ஆனால் இப்போது நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன் களம் இறங்குகிறோம். இதற்கு முன்பு நாங்கள் என்ன தவறு செய்துள்ளோம் என்பதை தற்போது உணர்ந்துள்ளோம்.

பெங்களூரு அணியுடன் நெருக்கமாக போட்டியிட்டாலும், கோவா அணி அரையிறுதிப் போட்டியில் மும்பையை 5 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. எது எப்படியோ இந்த லீக் போட்டிகளின் இறுதியில் இரண்டு முக்கிய அணிகள் மோதுகின்றன. யாருக்கு வெற்றி கிடைக்கும்?

(Photos Courtesy - ISL)

Story first published: Sunday, March 17, 2019, 8:56 [IST]
Other articles published on Mar 17, 2019
English summary
ISL 2019 - Bengaluru FC vs FC Goa finals preview analysis
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+