Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : முதல் இடத்துக்கு போட்டி போடும் கோவா.. பெங்களூரு அணியை வீழ்த்துமா?

பெங்களூரு : புள்ளி அட்டவணையில் எஃப்சி கோவா அணி முதலிடத்துக்கு முன்னேறியிருந்தாலும், அதனை தக்க வைத்துக்கொள்ள இன்று (பிப்ரவரி 21) பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் பெங்களூரு எஃப்சி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டியுள்ளது.

கோவா அணி, இன்றைய போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக 3 புள்ளிகளை எடுத்தால் அட்டவணையில் முதல் இடத்தை பிடிக்கலாம்.

ISL 2019 - Bengaluru FC vs FC Goa match no 82 preview

கோவா அணியினர் தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் இந்த சீசனை ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. இந்த சீசன் தொடங்கத்தில் கோவா அணி தற்காப்பு ஆட்டத்தை மேற்கொண்டது மிகவும் நல்லது என நினைக்கிறார் செர்ஜியோ லோபிரோ.

இந்த சீசனில் கோவா அணியின் தடுப்பாட்டம் அந்த அணிக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளது. எங்களது தற்காப்பு ஆட்டம் மிகவும் உதவியாக இருந்தது. எங்கள் அணியின் முதல் கோல் தற்காப்பு ஆட்டத்தின் மூலம் கிடைத்தது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் செர்ஜியோ. பாதுகாப்பான ஆட்டத்தில் ஒவ்வொரு முறையும் எங்கள் அணி முன்னேற்றம் அடைந்து வருகிறது.

ISL 2019 - Bengaluru FC vs FC Goa match no 82 preview

ஒட்டுமொத்தமாக எங்கள் அணி தற்காப்பு ஆட்டத்தில் முன்னேறியுள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் செர்ஜியா. கோவா அணி ஒட்டு மொத்தமாக மிக நன்றாக விளையாடி வருகிறது. பெங்களூரு அணி தற்போது நல்ல ஃபார்மில் இல்லாத நிலையில் வெற்றியைப் பெற்று விடலாம் என கோவா அணியினர் நினைக்கின்றனர்.

பெங்களூரு அணியினர் விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடக்கத்தில் மிக அற்புதமாக விளையாடிய பெங்களூரு அணி தற்போது அதன் முழுத் திறமையை காட்டவில்லை. அதே நேரத்தில் பெங்களூரு அணியினர் தங்களது வேகத்தை இழந்திருந்தாலும் முதலிடத்தில் உள்ளனர்.

ISL 2019 - Bengaluru FC vs FC Goa match no 82 preview

பெங்களூரு அணியைப் பொறுத்தவரை அதன் முக்கிய வீரர்கள் ஓய்வு எடுத்து வருகின்றனர். மேலும் சுழற்சி முறையில் அந்த அணி வீரர்கள் களம் இறக்கப்படுகிறார்கள். இந்த திட்டத்தை பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரெட் குளிர்கால இடைவேளைக்குப் பிறகு செயல்படுத்தி வருகிறார்.

தற்போது பெங்களூரு அணி வெற்றியடையும் மனநிலைக்கு திரும்பியுள்ளதால் இந்த போட்டியில் கோவா அணியை ஜெயிப்போம் என்கிறார் குவாட்ரெட். காயமடைந்து ஓய்வில் இருந்த மிக்கு தற்போது உற்சாகத்துடன் களம் இறங்குகிறார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு மிக்கு உள்ளிட்ட பெங்களூரு அணி வீரர்கள் புதிய உற்சாகத்துடன் விளையாட உள்ளனர் என்கிறார் குவாட்ரெட்.

ISL 2019 - Bengaluru FC vs FC Goa match no 82 preview

இந்த ஆட்டம் அனைவரும் விரும்பும் அதே நேரத்தில் கடினமான போட்டி என்றே சொல்லாம். இந்தப் போட்டியில் முதல் இடத்தைப் பிடிப்பது என்பது போக உளவியல் ரீதியாக அனைவருக்கும் ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும் ஆட்டம் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Thursday, February 21, 2019, 10:04 [IST]
Other articles published on Feb 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+