பெங்களூரு: பெங்களூருவில் பிப்ரவரி 21 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால் பந்து போட்டியில் பெங்களூரு அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 82 ஆவது கால்பந்து போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ காண்டீரவா ஸ்டேடியத்தில் பெங்களூரு எஃப்சி அணிக்கும், எஃப்சி கோவா அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற கோவா அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளுமே சிறப்பாக விளையாடின. ஆட்டத்தின் பெங்களூரு அணியின் நிஜு குமாருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கபட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ரினோ ஆண்ட்டோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 42 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் நிஜு குமாருக்கு மீண்டும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் அகமதுவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்களூரு மற்றும் கோவா அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது.

ஆட்டத்தின் 50 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஜுவான் ஒரு அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 58 ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் பெங்களூரு அணியின் உதாந்தா சிங் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

பின்னர் 61 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஹர்மந்த்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 69 ஆட்டத்தில் பெங்களுரு அணியின் பிக்கு அற்புதமாக ஒருகோல் அடித்தார்.

72 ஆவது நிமிடத்தில் போவா அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 73 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பிராண்டனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து இரு அணிகளுக்கு கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த 4 நிமிடத்திலும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை.

இதையடுத்து பெங்களூரு அணி, கோவா அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

(Photos Courtesy - ISL)