Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐஎஸ்எல் 2019 : நச்சுன்னு ஒரே கோல் அடித்து பெங்களூரு அணியை வீழ்த்தியது மும்பை!

மும்பை : மும்பையில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 62வது கால்பந்து போட்டி மும்பையில் உள்ள அரினா அரங்கத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும், பெங்களூரு எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30க்கு தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - Bengaluru FC vs Mumbai City FC match result

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் மிகக் கடுமையாக விளையாடின. பெங்களூரு அணி வீரர்கள் ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆனால் ஆட்டத்தின் 29 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் பவுலோ மச்சாடோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

30ஆவது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியின் சுபாஸிஷ் போசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதே போல் 31 ஆவது நிமிடத்தில் மற்றொரு மும்பை அணி வீரர் மொடுகு சோகுவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - Bengaluru FC vs Mumbai City FC match result

ஆட்டத்தின் 44 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ரஃபேலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 45 ஆவது நிமிடத்தில் ஜுனானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

முதல் பாதியின் முடிவில் கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த 2 நிமிடத்தில் இரண்டு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதி வரை மும்பை அணி 1 -0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

ISL 2019 - Bengaluru FC vs Mumbai City FC match result

இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. இரண்டாம் பாதியின் முடிவில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த 4 நிமிடத்திலும் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து மும்பை சிட்டி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Story first published: Monday, January 28, 2019, 10:44 [IST]
Other articles published on Jan 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+