Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : கோல் மழை.. நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்திய பெங்களூரு.. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது!

பெங்களூரு : பெங்களூருவில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி உள்ளது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது லீக் கால்பந்து போட்டி பெங்களூருவில் உள்ள காண்டீரவா அரங்கில் பெங்களூர எஃப்சி அணிக்கும் நார்த் ஈஸ்ட் அணிக்கும், இடையே நேற்று (மார்ச் 11) நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி இடது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - Bengaluru FC vs North East United FC Semifinal Leg 2 result

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் மிகச் சிறப்பாக விளையாடின. ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மிக்கு கோல் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த வாய்ப்பு நழுவிப் போனது.

ISL 2019 - Bengaluru FC vs North East United FC Semifinal Leg 2 result

தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தன. ஆனால் கோல் அடிக்கவில்லை. இதே போல் ஆட்டத்தின் 43 ஆவது நிமிடத்தில் மிக்குவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த முறையும் அந்த வாய்ப்பு நழுவிப் போனது.

ISL 2019 - Bengaluru FC vs North East United FC Semifinal Leg 2 result

இதையடுத்து இரு அணிகளுக்கும் 2 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. ஆனால் அந்த இரண்டு நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் அடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளுமே 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.

ISL 2019 - Bengaluru FC vs North East United FC Semifinal Leg 2 result

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின 60 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து ஆட்டத்தின் 72 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மிக்கு அற்புதமாக ஒரு கோல் அடித்தார். அடுத்து 70 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் டிமாசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - Bengaluru FC vs North East United FC Semifinal Leg 2 result

ஆட்டத்தின் 80 மற்றும் 82 ஆவது நிமிடங்களில் நார்த் ஈஸ்ட் மற்றும் பெங்களூரு அணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 86 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் லூயிஸ் ரோபசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 87 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் டிமோஸ் ஒரு கோல் அடித்தார். அடுத்து ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் ஷட்டரி ஒரு கோல் அடித்தார்.

அதே 90 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் ஷட்டரி வெளியேற்றப்பட்டு பைதாங் களம் இறக்கப்பட்டார்.

ISL 2019 - Bengaluru FC vs North East United FC Semifinal Leg 2 result

இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த 5 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து பெங்களூரு அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இருந்தது. இதனால், இரண்டாவது லெக் ஆட்டத்தில் பெங்களூரு அணி அதிக கோல் அடித்து வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ற கட்டாயம் இருந்தது.

அதன் படி 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற பெங்களூரு, இரண்டு அரையிறுதி ஆட்டங்களில் நார்த் ஈஸ்ட் அணியை விட 2 கோல்கள் கூடுதலாக அடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

(Photos Courtesy - ISL)

Story first published: Tuesday, March 12, 2019, 10:26 [IST]
Other articles published on Mar 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+