Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி!!

சென்னை : சென்னையில் பிப்ரவரி 9 அன்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது,

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 73 ஆவது கால்பந்து போட்டி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சென்னையின் எஃசி அணிக்கும், பெங்களூரு எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி இடது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - Chennaiyin FC vs Bengaluru FC match Result

ஆட்டத்தின் 2 ஆவது நிமிடத்திலேயே பெங்களூரு அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பு நழுவிப் போனது. இதைத் தொடர்ந்து சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் கடுமையாக மோதின.

ஆட்டத்தின் 32 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் ஜெஜெ அற்புதமாக ஒரு கோல் அடித்தார். பின்னர் 38 ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை கிரிகோரி நெல்சன் தவறவிட்டார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 43 ஆவது நிமிடத்தில் கிரிகோரி நெல்சன் ஒரு கோல் அடித்தார்.

ISL 2019 - Chennaiyin FC vs Bengaluru FC match Result

அப்போது சென்னை அணி இரண்டு கோல்கள் அடித்திருந்தது. பின்னர் ஆட்டத்தில் கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த இரண்டு நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் சென்னை அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 48 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் லூயிஸ் லோபசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 54 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் லூயிஸ் லோபஸ் வெளியேற்றப்பட்டு கீன் லெவிஸ் களம் இறக்கப்பட்டார்.

ISL 2019 - Chennaiyin FC vs Bengaluru FC match Result

இதையடுத்து ஆட்டத்தின் 57 ஆவது நிமிடத்தில் பெங்களுரு அணியின் சுனில் ஷட்டரி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கிரிகோரி நெல்சனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

72 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் சி.கே.வினித் வெளியேற்றப்பட்டு தாய்சிங் களம் இறக்கப்பட்டார். 73 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் எரிக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - Chennaiyin FC vs Bengaluru FC match Result

90 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இதே போல் சென்னை அணியிலும் மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த 5 நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை.

ISL 2019 - Chennaiyin FC vs Bengaluru FC match Result

இதையடுத்து சென்னை அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Story first published: Sunday, February 10, 2019, 10:59 [IST]
Other articles published on Feb 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+