Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : தோல்வியோ தோல்வி.. சென்னையின் எஃப்சி தோல்விகளில் இருந்து மீளுமா?

ISL 2019 : தோல்வியோ தோல்வி.. சென்னையின் எஃப்சி தோல்விகளில் இருந்து மீளுமா?

சென்னை : தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் சென்னை அணியின் மனச் சோர்வை போக்கும் வகையில் இன்று (பிப்ரவரி 2) சென்னை ஜவஹர்லால் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எஃப் சி கோவா அணியை வெற்றி பெறுமா?

ISL 2019 - Chennaiyin FC vs FC Pune City match no-67 preview

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரு அணி இவ்வளவு மோசமான தோல்வியை சந்தித்ததில்லை. இந்த அணி 13 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகளை மட்டுமே பெற்று அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது. முக்கியமாக இந்த அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று ஒரு மோசமான உதாரணத்தைப் பெற்றுள்ளது.

இந்த அணி ஒருங்கிணைந்து தடுப்பாட்டத்தை விளையாடவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு. முறையற்ற தடுப்பாட்டத்தால் மற்ற அணியினர் சென்னைக்கு எதிராக 25 கோல்களை அடித்துள்ளனர்.

ISL 2019 - Chennaiyin FC vs FC Pune City match no-67 preview

மெயில்சன் ஆல்வாஸ் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாலும், இனிகோ கால்ட்ரன் இல்லாததாலும் சென்னை அணி சற்று பலவீனமாகவே உள்ளது.

கூடுதலாக சி.கே.வினித்தும், காளிசரண் நர்சாரியும் வேறு அணியில் இருந்து சென்னை அணிக்கு வந்துள்ளதால் அது கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி, நாங்கள் வெளிநாட்டினர் முழு ஒதுக்கீடு முறையில் விளையாட முடியும் ஆனால் ஏஎஃப்சி கோப்பை மற்றும் சூப்பர் கோப்பை சேர்ந்து வரும் போது, வீரர்கள் எண்ணிக்கை தடையாக உள்ளதாக கூறினார்.

ISL 2019 - Chennaiyin FC vs FC Pune City match no-67 preview

அதே நேரத்தில் வெளிநாட்டு பிளேயர்கள் இல்லாத குறையை வினீத் மற்றும் காளிசரண் ஆகியோர் பூர்த்தி செய்வார்கள் என அவர் கூறினார். இந்திய வீரர்களுடன் விளையாடுவது தனக்கு மகிழ்ச்சி. அதே நேரத்தில் சில வெளியாட்டு வீரர்கள் மாற்றப்படவுள்ளதாக கிரிகோரி தெரிவித்தார்.

எஃப்சி புனே அணி புதிய மேலாளர் பில் பிரவுன் தலைமையின் கீழ் வெற்றியைப் பெற வேண்டும் என்ற துடிப்புடன் உள்ளது. கடந்த சீசனில் சென்னை மற்றும் புனே என இரு அணிகளுமே தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என விளையாடினர்.

ISL 2019 - Chennaiyin FC vs FC Pune City match no-67 preview

புனே அணியின் இயக்குநர் குழு என்னை மேனேஜராக நியமித்தபோது அந்த அணியின் தற்போதைய நிலை குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர். அடுத்து வரும் 6 போட்டிகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அவர்கள் கூறினர். இது பெரும் சவால் என்பதை நன்கு அறிந்திருக்கிறேன் என்கிறார் புனே அணியின் மேனேஜர் பில் பிரவுன்.

இதையடுத்து நான் அணி வீரர்களுடன் பேசினேன். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்தினேன் என்கிறார் பிரவுன்.

கடந்த இரண்டு போட்டிகளிலும் புனே அணி வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது வெற்றியை எதிர்நோக்கியுள்ளது. மார்சிலோனா தற்போது நல்ல ஃபார்மில் உள்ளார். ஆசிய கோப்பை போட்டிகளின்போது ஆஷிஷ் குருணியன் நன்றாக விளையாடியதை பிரவுன் சுட்டிக் காட்டியுள்ளார்.

இரு அணிகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு நல்ல முடிவை எந்த அணி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, February 2, 2019, 10:50 [IST]
Other articles published on Feb 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+