For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : சென்னை – ஜாம்ஷெட்பூர் போட்டி கடைசில இப்படி ஆகிடுச்சே!

சென்னை : சென்னையில் பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் இடையே நடைபெற்ற போட்டி 0 - 0 க்கு என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 84 ஆவது கால்பந்து போட்டி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சென்னை அணிக்கும், ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஜாம்ஷெட்பூர் அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - Chennaiyin FC vs Jamshedpur FC match 84 Report

ஆட்டம் தொடங்கியது முதல் விறுவிறுப்பில்லாமல் மெதுவாக நகர்ந்தது. ஸ்வாரஸ்யம் இன்றி ஆட்டம் இருந்தது. கிட்டத்தட்ட முதல் அரை மணி நேரத்துக்கு இரு அணிகளுமே தடுப்பாடடத்தை கையில் எடுக்கவில்லை.

ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் லால்தின் லியானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - Chennaiyin FC vs Jamshedpur FC match 84 Report

இதையடுத்து கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. அந்த ஒரு நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதி வரை 0 - 0 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது, ஆட்டத்தின் 61 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஃபாருக் வெளியேற்றப்பட்டு மைக்கேல் சூசைராஜ் களம் இறக்கப்பட்டார்.

ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் தனசந்திர சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 65 ஆவது நிமிடத்தில் சென்னையின் சி.கே,வினீத் வெளியேற்றப்பட்டு தாய்சிங் களம் இறக்கப்பட்டார்.

ISL 2019 - Chennaiyin FC vs Jamshedpur FC match 84 Report

ஆட்டத்தின் 68 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கிறிஸ்டோபருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 73 மற்றும் 75 ஆவது நிமிடங்களில் சென்னை மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஆட்டத்தின் 87ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் கரனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த மூன்று நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து சென்னை மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Story first published: Sunday, February 24, 2019, 16:53 [IST]
Other articles published on Feb 24, 2019
English summary
ISL 2019 - Chennaiyin FC vs Jamshedpur FC match 84 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+