For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : ஜெயிக்கப் போவது யார்.. சேட்டன்களா.. சென்னை மச்சான்ஸ்-ஆ? கேரளா - சென்னை போட்டி!

கொச்சி : கேரளா அணியின் பயிற்சியாளர் நெலோ விங்கடா கடந்த ஆட்டத்தில் கேரளா அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியதை அடுத்து, இன்று (பிப்ரவரி 15) கொச்சி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தென் இந்திய அணிகளான கேரளா மற்றும் சென்னை அணிகளுக்கிடையே போட்டி நடைபெறுகிறது.

விங்கடா பதவியேற்ற பிறகு ஏடிகே மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. நார்த் ஈஸ்ட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான விங்கடா கேரளா அணிககு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் தான்.

ISL 2019 - Chennaiyin FC vs Kerala Blasters FC match no-77 preview

கேரளா அணியைப் பொறுத்தவரை 14 ஆட்டங்களில் தோல்வியும், ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றியும் பெற்றுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி, எனது எண்ண ஓட்டத்தைச் சொல்வதென்றால், கேரளா அணி அதன் சொந்த மண்ணில் விளையாடுகிறது. எனவே ரசிகர்கள் கேரளா அணிக்கு ஆதரவு அளிப்பார்கள். ஆனால் ஏன் கேரளா அணி கடந்த 5 சீசன்களில் வெற்றி பெறவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

ISL 2019 - Chennaiyin FC vs Kerala Blasters FC match no-77 preview

கோல் அடிப்பதில் கோட்டை விடுவது கேரளா அணியின் பலவீனம். 15 ஆட்டங்களில் பல முறை அதை உணர முடிந்தது. ஸ்லாவிசா என்ற ஒரு வீரர் மட்டும்தான் ஒரு கோலுக்கு மேல் அதாவது நான்கு கோல் அடித்துள்ளார். இது கேரளா அணிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இந்த ஆட்டம் மிக முக்கியமான, அதே நேரத்தில் கஷ்டமான ஆட்டம் என்கிறார் விங்கடா. நான் பொறுப்பேற்ற பிறகு ஆடிய மூன்று ஆட்டங்களில் கேரளா அணி சற்று முன்னேறியுள்ளது. திறம்பட நமது நேரத்தை செலவு செய்து உழைத்தோமானால் இந்த போட்டி நன்றாக இருக்கும் என்கிறார் விங்கடா.

ISL 2019 - Chennaiyin FC vs Kerala Blasters FC match no-77 preview

மற்றொரு புறம் கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி இந்த போட்டியில் நன்றாக விளையாடி அட்டவணையில் ஒரு படி முன்னேற முயற்சி செய்யும்.

இனி வரும் மூன்று ஆட்டங்களிலும் சென்னை அணி 9 புள்ளிகளை எடுக்கவேண்டும் அதற்காக நாம் உழைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்று சொல்கிறார் கிரிகோரி.

கேரளா அணி தற்போது பெற்றுள்ள புள்ளிகளை நாமும் பெற ஒரு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் மூன்று ஆட்டங்களில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மெயில்சன் ஆல்வாஸ் களம் இறங்குகிறார்.

ISL 2019 - Chennaiyin FC vs Kerala Blasters FC match no-77 preview

கடந்த போட்டியில் பெற்ற வெற்றிதான் சென்னை அணியின் இரண்டாவது வெற்றி. பெங்களூரு அணிக்கு எதிராக 2- 1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி அப்போது வெற்றி பெற்றது.

கடந்த போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தியது சென்னை அணிக்கு சாதகமாக உள்ளது. அதுவும் ஜெஜெ களம் இறங்கியிருப்பது சென்னை அணிக்கு ஒரு பலம். இதே போல் கேரளா அணியில் இருந்து சென்னை அணிக்கு வந்திருக்கும் சி.கே.வினித், காளிச்சரண் போன்ற வீரர்கள் தங்களது தாய் அணியான கேரளாவுக்கு எதிராக நன்றாக விளையாடுவார்கள் என்பதால் இந்த போட்டியில் சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்கிறார் கிரிகோரி.

(Photos Courtesy - ISL)

Story first published: Friday, February 15, 2019, 11:03 [IST]
Other articles published on Feb 15, 2019
English summary
ISL 2019 - Chennaiyin FC vs Kerala Blasters FC match no-77 preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+