For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : கோல் மழை பொழிந்த கேரளா அணி.. சென்னை அணி பரிதாபம்!

கொச்சி : கொச்சியில் பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 77 ஆவது கால்பந்து போட்டி கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கும், சென்னையின் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி இடது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - Chennaiyin FC vs Kerala Blasters FC match result

ஆட்டத்தின் 9 ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கிரிகோரி நெல்சன் அதனை நழுவவிட்டார். ஆட்டத்தின் 11 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கிறிஸ்டோபருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் மெட்டாஜ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2019 - Chennaiyin FC vs Kerala Blasters FC match result

இதைத் தொடர்ந்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த 2 நிமிடங்களில் இரு அணிகளுமே கூடுதலாக கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. 52 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 55 ஆவது நிமிடத்தில் மெட்டாஜ் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

ISL 2019 - Chennaiyin FC vs Kerala Blasters FC match result

ஆட்டத்தின் 57 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கிறிஸ்டோபர் மாற்றப்பட்டு அனிருத் தப்பா களம் இறக்கப்பட்டார். 62 ஆவது நிமிடத்தில் சென்னை அணியில் மீண்டும் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.

ISL 2019 - Chennaiyin FC vs Kerala Blasters FC match result

இதே போல் 67 ஆவது நிமிடத்தில் கேரளா அணியிலும் மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 67 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கிரிகோரி நெல்சனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

பின்னர் 71 ஆவது நிமிடத்தில் கேரளாவின் சாகல் அகமது அணியின் மூன்றாவது கோலை அடித்தார். இதைத் தொடர்ந்து 77 மற்றும் 82 ஆவது நிமிடத்தில் சென்னை மற்றும் கேரளா அணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 88 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சிரிலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - Chennaiyin FC vs Kerala Blasters FC match result

இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த நான்கு நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ISL 2019 - Chennaiyin FC vs Kerala Blasters FC match result
Story first published: Saturday, February 16, 2019, 11:19 [IST]
Other articles published on Feb 16, 2019
English summary
ISL 2019 - Chennaiyin FC vs Kerala Blasters FC match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+