For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி டைனமோஸ் அணி அபார வெற்றி!!

டெல்லி : டெல்லியில் நேற்று (பிப்ரவரி 17) நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் டெல்லி டைனமோஸ் அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 79 ஆவது கால்பந்து போட்டி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் டெல்லி டைனமோஸ் எஃப்சி அணிக்கும், பெங்களூரு எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி இடது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - Delhi Dynamos FC vs Bengaluru FC match no 79 result

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. ஆட்டத்தின் 9 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் உலிசஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 12 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் எக்ஸிஸ்கோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 19 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் பைதாங் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 41 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் மார்ட்டிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - Delhi Dynamos FC vs Bengaluru FC match no 79 result

பின்னர் இரு அணிகளுக்கும் ஒரு நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. அந்த ஒரு நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை.

இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதி வரை டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

ISL 2019 - Delhi Dynamos FC vs Bengaluru FC match no 79 result

பின்னர் ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 46 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் சுபம் சாரங்கி வெளியேற்றப்பட்டு டேனியல் களம் இறக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 50 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஹர்மன்ஜோத்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

பின்னர் ஆட்டத்தின் 59 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் பையோதாங் வெளியேற்றப்பட்டு சுனில் ஷட்டரி களம் இறங்கினார். ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.

ISL 2019 - Delhi Dynamos FC vs Bengaluru FC match no 79 result

ஆட்டத்தின் 72 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் ஷட்டரி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். அடுத்து 74 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மிக்கு வெளியேற்றப்பட்டு லூயிஸ் ரோபஸ் களம் இறக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 77 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் டேனியல் ஒரு கோல் அடித்தார். பின்னர் 80 ஆவது நிமிடத்தில் டேனியல் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

80 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியிலும், 81 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆட்டத்தின் 87 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் ராணாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - Delhi Dynamos FC vs Bengaluru FC match no 79 result

பின்னர் கூடுதலாக மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த மூன்று நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து டெல்லி டைனமோஸ் அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

Story first published: Monday, February 18, 2019, 18:11 [IST]
Other articles published on Feb 18, 2019
English summary
ISL 2019 - Delhi Dynamos FC vs Bengaluru FC match no 79 result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+