For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019: பெருமையை தக்க வைத்துக் கொள்ள மோதும் டெல்லி மற்றும் கேரளா அணிகள்!

டெல்லி: ஐஎஸ்எல் போட்டிகளின் மிக முக்கியமான அணிகளான டெல்லி மற்றும் கேரளா அணிகள் ஒரு தவறான திசைக்கு சென்றுவிட்ட நிலையில் இன்று டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

கடந்த ஆண்டின் இறுதியில் சென்னை அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் டெல்லி அணி வென்ற அதே உற்சாகத்துடன் 2019 ஆம் ஆண்டும் களம் இறங்குகிறது. ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது டெல்லி அணிக்கு ஒரு வெற்றி என்பது அவசியமாகிறது.

ISL 2019 - Delhi Dynamos FC vs Kerala Blasters FC match no.65 preview

கடந்த இரண்டு ஆட்டங்களிலும் நாங்கள் கடுமையாக உழைத்து விளையாடினோம். அதே போல் இந்த ஆட்டத்திலும் மீண்டும் எங்களது உழைப்பு இருக்கும் என்கிறார் டெல்லி அணியின் பயிற்சியாளர் ஜோசப்.

அன்ட்ரியா, பிரீத்தம் கோடல் மற்றும் சியாம் ஹாங்கல் ஆகியோரின் ஆட்டம் டெல்லி கிளப் அணியை பலப்படுத்தும். மேலும் மெக்ஸிகன் மிட்பீல்டர் உலிஸ் டேவிலாவும் இவர்களுடன் களம் காண்கிறார்.

ISL 2019 - Delhi Dynamos FC vs Kerala Blasters FC match no.65 preview

பிரீத்தம் கோட்டல் எங்கள் அணியின் முக்கியமான வீரர். அவர் எங்கள் அணியின் கேப்டன் மட்டுமல்லாமல் 11 ஆட்டங்களில் களம் கண்டுள்ளார். அதே நேரத்தில் டெல்லி அணி வீரர்கள் கடந்த போட்டிகளில் பலமுறை கோல்களை நழுவவிட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த லீக்கில் மோசமான ஒரு தடுப்பாட்டத்தை ஆடியுள்ளனர்.

இந்த சீசனிலேயே டெல்லி அணி சென்னை அணியை எதிர்த்து தங்களது சொந்த மண்ணில் முதன் முறையாக வெற்றி பெற்றுள்ளனர். தற்போது இரண்டு அணிகளுமே 13 ஆட்டங்களில் விளையாடியுள்ளனர். இரு தரப்பினரும் 13 கோல்கள் அடித்துள்ளனர். ஆனாலும் கேரளா அணியை விட டெல்லி அணிக்கு ஒரு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றே கூற வேண்டும்.

ISL 2019 - Delhi Dynamos FC vs Kerala Blasters FC match no.65 preview

டெல்லியைப் போலவே கேரளா அணியிலும் இடைவேளைக்கும் பிறகு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. போரிங்போ போடா கேரளா அணியிலும், லால்துமாவியா கோவா அணியிலும் இணைந்துள்ளனர்.

அதே நேரத்தில் டெல்லி அணியைப் போல் அல்லாமல் கேரள பிளாஸ்டர்ஸ் அணி இடைவேளைக்கும் பிறகு இந்த லீக்கில் ஒரு போட்டியில் விளையாடியுள்ளது. நெலோ விங்கடா தனது முதல் போட்டியில் சொந்த மணணில் ஏடிகே அணிக்கு எதிராக 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த கேரளா அணியின் பயிற்சியாளர் விங்டா, இதுவரை கிடைத்துள்ள இந்த முடிவுகள் எங்கள் அணிக்கான அளவு கோல் இல்லை என்று நம்புகிறேன் என தெரிவித்தார். நான் பொறுப்பேற்ற இரண்டாவது நாளில் ஆட்டம் நடைபெற்றது . அதனால் என்னைப் பற்றி அணி வீரர்களும், அவர்களைப் பற்றி நானும் நன்கு அறிந்து வைத்துள்ளேன் என்றார்.

ISL 2019 - Delhi Dynamos FC vs Kerala Blasters FC match no.65 preview

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற போட்டியில் ஏடிகே அணிக்கு எதிராக வெற்றி பெற்றதோடு சரி அதன் பிறகு 12 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை.

இப்போது அந்த அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ளுமா?

(Photos Courtesy - ISL)

Story first published: Thursday, January 31, 2019, 14:26 [IST]
Other articles published on Jan 31, 2019
English summary
ISL 2019 - Delhi Dynamos FC vs Kerala Blasters FC match no.65 preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+