Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : பாதாளத்தில் இருக்கும் டெல்லி அணியால் நார்த் ஈஸ்ட் அணியை வெல்ல முடியுமா?

கவுஹாத்தி : கவுஹாத்தி இந்திரா காந்தி அத்தெலட்டிக் ஸ்டேடியத்தில் பிப்ரவர் 6 அன்று நடைபெற்வுள்ள ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் டெல்லி டைனமோஸ் அணியை கட்டாயம் வெல்ல வேண்டிய சூழ்நிலைக்கு நார்த் ஈஸ்ட் அணி தள்ளப்பட்டுள்ளது.

நார்த் ஈஸ்ட் அணி இது வரை 14 போட்டிகளில் விளையாடி 23 புள்ளிகளைப் பெற்று அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ளது. எஞ்சிய நான்கு ஆட்டங்களில் அட்டவணையில் அடுத்தடுத்து இருக்கும் ஜாம்ஷெட்பூர் மற்றும் ஏடிகே அணிகளை சந்திக்க வேண்டியுள்ளது.

ISL 2019 - Delhi Dynamos FC vs North East United FC match no-71 preview

எல்கோ ஷட்டரி தலைமையிலான இந்த அணி தங்களது சொந்த மண்ணில் ஏழு ஆட்டங்களில் விளையாடிய இரண்டில் மட்டுமே வென்றது. இந்த சூழ்நிலையில் தாங்கள் இழந்த புள்ளிகளை மீட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

டெல்லி அணி இனி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம். அதனால் அவர்கள் எந்தவித பதற்றமும் இல்லாமல் விளையாடுவார்கள். மேலும் அவர்கள் ஒரு வித்தியாசமான மனநிலையில் விளையாடுவார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. இந்தப் போட்டியில் வென்றாக வேண்டும். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இந்த ஆட்டம் முக்கியமானது என்கிறார் எல்கோ ஷட்டரி.

ISL 2019 - Delhi Dynamos FC vs North East United FC match no-71 preview

டெல்லி அணி கோவா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் போடவில்லை. மேலும் கடந்த 5 போட்டிகளில் அந்த அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பதை ஷட்டரி அறிவார்.

நார்த் ஈஸ்ட் அணி தொடக்கத்தில் நட்சத்திர வீரர் பர்த்லோமி ஓக்பேஷுடன் 4-2-3-1 என்ற வியூகத்தை அமைக்க எண்ணியது. ஆனால் பயிற்சியாளர் எல்கோ ஷட்டரி 4-4-2 என்ற வியூகத்தை செயல்படுத்திப் பார்த்தார்.

ISL 2019 - Delhi Dynamos FC vs North East United FC match no-71 preview

டெல்லி டைனமோல் அணியைப் பொறுத்த வரை ஐஎஸ்எல் போட்டி பயணத்தில் சில தடைகள் உருவானது. அந்த அணி கடந்த மூன்று ஆட்டங்களில் 7 புள்ளிகளை பெற்றது. ஆனாலும் அந்த அணி தொடக்கத்திலேயே புள்ளிகளைப் பெற தவறிவிட்டது. இதனால் அவர்களின் பிளே ஆஃப் கனவு தகர்ந்தது.

இருந்தபோதிலும் இந்த போட்டியில் டெல்லி மைனமோஸ் அணி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது. எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற்றால் எங்கள் அணிக்கு ஒரு நம்பிக்கை உண்டாகும். எங்கள் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றாலும் அடுத்த போட்டியில் 2 - 0 என்ற கோல் கணக்கில் கண்டிப்பாக நாங்கள் ஜெயிப்போம். அப்படி ஒரு நம்பிக்கை எங்கள் அணிக்கு உள்ளது என்கிறார் டெல்லி டைனமோஸ் அணியின் துணை மேலாளர் மிர்துள் பானர்ஜி.

ISL 2019 - Delhi Dynamos FC vs North East United FC match no-71 preview

டெல்லி அணியின் சில வீரர்களுக்கு உடல் தகுதிகள் குறித்த கவலைகள் உள்ளன. மிட்ஃபீல்டர் பிக்ராஜிஜித் சிங் காயமடைந்துள்ளார். மற்றொரு வீரரான அட்ரியா கார்மோனா அணியில் பயணித்த போதிலும் காயம் காரணமாக ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

(Photos Courtesy - ISL)

Story first published: Thursday, February 7, 2019, 11:06 [IST]
Other articles published on Feb 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+