Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : டெல்லி அணிக்கு எதிராக போராடி டிரா செய்த நார்த் ஈஸ்ட்!

பெங்களூரு : கவுஹாத்தியில் பிப்ரவரி 7 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் மற்றும் டெல்லி அணிகளிடையே நடைபெற்ற ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 71 ஆவது கால்பந்து போட்டி கவுஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி அத்தெலட்டிக் ஸ்டேடியத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிக்கும் டெல்லி டைனமோஸ் எஃப்சி அணிக்கும் இடையே இன்று நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - Delhi Dynamos FC vs North East United FC match no-71 report

முதல் 15 நிமிடங்களுக்கு இரு அணிகளுமே மந்தமாக விளையாடின. அதனால் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 33 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரெடீம் வெளியேற்றப்பட்டு குர்விந்தர் சிங் களம் இறக்கப்பட்டார்.

தொடர்ந்து இரு அணிகளுமே சிறப்பாக விளையாடின. மேலும் கோல் அடிக்க பெரும் முயற்சி எடுத்தன. ஆனால் ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை.

ISL 2019 - Delhi Dynamos FC vs North East United FC match no-71 report

இதைத் தொடர்ந்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த இரண்டு நிமிடத்திலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணியும், டெல்லி டைனமோஸ் அணியும் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தன.

ISL 2019 - Delhi Dynamos FC vs North East United FC match no-71 report

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 60 மற்றும் 61 ஆவது நிமிடங்களில் டெல்லி அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. 61 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ராபர்ட்டுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - Delhi Dynamos FC vs North East United FC match no-71 report

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 67 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் மார்கோஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

பின்னர் ஆட்டத்தின் 71 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்தலோமி ஒரு கோல் அடித்தார். அடுத்து 86 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து 87 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்தலோமி வெளியேற்றப்பட்டு ஜுனன் களம் இறக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த இரண்டு நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை.

ISL 2019 - Delhi Dynamos FC vs North East United FC match no-71 report

இதைத் தொடர்ந்து நார்த் ஈஸ்ட் அணி மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகள் இடையேயான ஆட்டம் 1- 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

(Photos Courtesy - ISL)

Story first published: Friday, February 8, 2019, 10:10 [IST]
Other articles published on Feb 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+