Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்வியில் இருந்து கத்துகிட்டதை வைத்து பெங்களூருவை இறுதியில் வீழ்த்துவோம்.. கோவா அணி அதிரடி!

மும்பை : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இறுதி ஆட்டத்தில் எஃப்சி கோவா - பெங்களூரு எஃப்சி அணிகள் மோத உள்ளன. வரும் ஞாயிறன்று இப்போட்டி நடைபெற உள்ளது.

லீக் சுற்றில் இரு அணிகளும் சம புள்ளிகளை பெற்றிருந்தன. எனினும் கோவாவுடன் நேரடி மோதலில் பெங்களூரு அதிக வெற்றிகளை பெற்றிருந்தது.

இத்தொடரில் கோவா அணி அதிக கோல் அடித்த அணியாக கோவா திகழ்கிறது. ஆனால் பெங்களூருவிடம் சொந்த மண்ணில் 1-2 என கோவா தோற்றிருந்தது. பெங்களூருவில் அந்த அணியிடம் 0-3 என மோசமாக தோற்றிருந்தது கோவா.

ISL 2019 - FC Goa preparing against Bengaluru Fc for the finals

இந்த முடிவுகளை பார்க்கும் போது இறுதி போட்டியில் பெங்களூருவுக்கு அதிக வாய்ப்புள்ளது போல் தோன்றும். லீக். சுற்றில் செலுத்திய ஆதிக்கம் நாக் அவுட்டில் பலன் தந்துவிடாது என பெங்களூரு பயிற்சியாளருக்கும் தெரியும்.

கடந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து அதிரடி காட்டிய பெங்களூரு இறுதிப் போட்டியில் சென்னையின் அணியிடம் வீழ்ந்தது. இந்த சீசனில் பெங்களூருவிடம் கோவா 2 முறை வீழ்ந்ததில் இருந்து பாடம் கற்க வேண்டும். ஆனால் கோவா அணி எந்த அணியையும் வீழ்த்தும் திறன் பெற்றிருக்கிறது.

"2 தோல்விகளில் கிடைத்த பாடத்தை இறுதிப்போட்டியில் செயல்படுத்துவோம்" என்கிறார் கோவா பயிற்சியாளர் லொபெரா.

கோவா அணியில் மேட்ச் வின்னர்களுக்கு எந்த பஞ்சமும் இல்லை. ஃபெரோன் கொரோமினாஸ், எடு பெடியா இருவரும் இத்தொடரில் 23 கோல் அடித்துள்ளனர். இது தவிர 12 கோல்களுக்கு உதவியும் உள்ளனர்.

இந்த இரு ஸ்பானியர்களும் இறுதிப் போட்டியில் மாயாஜாலம் புரியக் கூடியவர்கள். இது தவிர நடுக்களத்தில் அகமது ஜாகூ உள்ளார். மத்திய பின் களத்தில் மோர்ட்டடா ஃபால் உள்ளார்.

சிறப்பான வீரர்களை கொண்டுள்ள கோவா அணி பெங்களூருவுக்கு தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியை பரிசளிக்கும் முனைப்பில் உள்ளது.

(Photos Courtesy - ISL)

Story first published: Saturday, March 16, 2019, 10:09 [IST]
Other articles published on Mar 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+