Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : கோல் மழை பொழிந்த கோவா.. ஏடிகே அணி படு தோல்வி!

கோவா : கோவாவில் பிப்ரவரி 14 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் கால்பந்து போட்டியில் கோவா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 76 ஆவது கால்பந்து போட்டி கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கோவா எஃப்சி அணிக்கும், ஏடிகே அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30க்கு தொடங்கியது. டாஸ் வென்ற கோவா அணி இடது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - FC Goa vs ATK match full report

ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே கோவா அணியின் ஜாக்கிசந்த் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். கடந்த சீசனில் ஜாம்ஷெட்பூர் எஃசி அணியின் ஜெர்ரி அதிவேகமாக ஒரு கோல் அடித்தார். அதைப் போல இந்த சீசனில் ஜாக்கிசந்த் ஆட்டம் தொடங்கிய உடனேயே கோல் அடித்து சாதனை படைத்தார்.

ISL 2019 - FC Goa vs ATK match full report

இதையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க வேண்டும் என்ற வேகத்தில் சிறப்பாக விளையாடின. ஆட்டத்தின் 40 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் மோர்ட்டாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தின் 42 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் எவர்டோன் வெளியேற்றப்பட்டு ஆண்ரி பிக்கி களம் இறக்கப்பட்டார்.

ISL 2019 - FC Goa vs ATK match full report

ஆட்டத்தின் இறுதியில் கூடுதலாக இரண்டு நிமிடங்கள் கொடுக்கப்பட்டன. அந்த இரண்டு நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் 53 நிமிடத்தில் கோவா அணியின் ஃபெரான் கொராமினாஸ் ஒரு கோல் அடித்தார்.

ISL 2019 - FC Goa vs ATK match full report

54 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஜான் ஜான்சனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 62 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஹிதேஷ் சர்மா வெளியேற்றப்பட்டு பல்வந்த் சிங் களம் இறங்கினார்.

இதைத் தொடர்ந்து 68 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் பிரீத்தம் கோட்டல் வெளியேற்றப்பட்டு அன்கிட் முகர்ஜி களம் இறங்கினார்.

ISL 2019 - FC Goa vs ATK match full report

71 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் அகமத் வெளியேற்றப்பட்டு ஹீகோ களம் இறங்கினார். தொடர்ந்து ஏடிகே அணியின் அன்கிட்டுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 81 ஆவது நிமிடத்தில் கோவா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திக் கொண்ட ஃபெரான் கொராமினால் கோல் அடித்தார்.

ISL 2019 - FC Goa vs ATK match full report

இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த நான்கு நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து கோவா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணியை வீழ்த்தியது.

(Photos Courtesy - ISL)

Story first published: Friday, February 15, 2019, 10:11 [IST]
Other articles published on Feb 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+