கோவா : கோவா ஃபடோர்டா ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று (பிப்ரவரி 14) நடைபெற உள்ள ஐஎஸ்எல் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஏடிகே அணி கோவா அணியை வீழ்த்தினால் ஒருவேளை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.
ஸ்டீவ் காப்பலின் ஏடிகே அணி வீரர்கள் இணைந்து தடுப்பாட்டம் ஆடுவதில் வல்லவர்கள் என்பதை இந்த சீசனில் நிரூபித்திருக்கிறார்கள். எப்படி என்றால் 15 போட்டிகளில் 15 கோல்கள் அடித்துள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் மோசமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த போட்டியில் கோவா அணியை வென்றால் 21 புள்ளிகளைப் பெற்று அட்டவணையில் 6 வது இடத்தில் இருக்கும் ஏடிகே அணி, நான்காவது இடத்தில் உள்ள கோவா அணியை முந்த முடியும். ஆனால் கோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபிரோ தங்களது அணியை மிக பலமான ஒன்றாக உருவாக்கியுள்ளார்.
இந்த இரு அணிகளும் கடந்த முறை மோதிக் கொண்ட போது இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆனால் அவை மீண்டும் மோதும் நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

கோவாவுக்கு வந்து பாருங்கள் ஏடிகே அணி வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று? அவர்கள் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளனர். தற்போது எங்களுக்குத் தேவை ஒரு வெற்றி மட்டுமே என்கிறார் ஸ்டீவ் காப்பல்.
இந்த சீசனில் சற்று முன்பாக வந்திருந்தால் அந்த டிராவை விட்டுக் கொடுத்திருக்க மாட்டோம். ஆனால் இந்த போட்டியில் டிரா என்பது வெற்றி அல்ல, கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிறார் காப்பல்.

புனேக்கு எதிரான கடந்த போட்டி 2 - 2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதே போல் கடந்த மூன்று போட்டிகளிலும் இதே நிலைதான். இதை ரசிகர்கள் விரும்பவில்லை.
ஏடிகே அணியின் மானுவல் லான்சரேட் மற்றும் எடு கார்சியா ஆகிய வீரர்கள் தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்குகிறார்கள். இவர்கள் இருவருமே கோவா அணிக்கு அச்சறுத்தலாக இருப்பார்கள் என எண்ணுகிறார் கோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபிரோ.
நாங்கள் ஒரு சிறந்த அணியை எதிர்கொள்ளப் போகிறோம். நாம் எதிர்கொள்ளப் போவது தனிப்பட்ட ஒருவரை அல்ல, ஒரு அணியை என்று எனது வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். எடு கார்சியா தற்போது நல்ல ஃபார்மில் உள்ளதால் கவனமுடன் விளையாட வேண்டும் என்கிறார் லோபிரா.

கடந்த சீசனில் லோபிராவின் கோவா அணி, பிளே ஆஃப் சுற்றில் ஜாம்ஷெட்பூர் அணியுடன் விளையாடியது. அப்போது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தது காப்பல்தான் என்பதை லோபிரா நினைவு படுத்துகிறார்.
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது ஏடிகே அணியா? அல்லது கோவா அணியா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
(Photos Courtesy - ISL)