For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த கோவா - பெங்களூரு! வெற்றி யாருக்கு?

மும்பை: ஹீரோ இந்திய சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் ஆச்சரியப்படத்தக்க இறுதிப் போட்டிகளைத் தோற்றுவித்துள்ளது. மும்பை சிட்டி எப்.சி. அணியை கோவா அணி 5-2 என வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

தற்போது ஐஎஸ்எல் போட்டிகளில் பெங்களூரு மற்றும் கோவா அணிகள் சிறந்த அணிகளாக விளங்குகின்றன. இந்த இரண்டு அணிகளும் கடந்த சீசனிலும் சிறப்பாக விளையாடின. ஆனால் கடந்த சீசனில் சென்னையின் எஃசி அணி கோவா அணியை ஜெயித்து, தொடரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்தார்கள்.

ISL 2019 - FC Goa vs Bengaluru FC Finals at Mumbai preview

இந்த சீசனில் பெங்களூரு அணி நார்த் ஈஸ்ட் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஜெயித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ISL 2019 - FC Goa vs Bengaluru FC Finals at Mumbai preview

செர்ஜியோ லோபிராவின் கோவா அணியும் கார்லஸ் குவாட்ரெட்டின் பெங்களூரு அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. மிகச் சிறந்த இரு அணிகளுமே மோதுவதால் இரு அணிகளுக்கும் கடுமையான அழுத்தமும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

ISL 2019 - FC Goa vs Bengaluru FC Finals at Mumbai preview

180 நிமிடங்களுக்குப் பிறகு, இறுதிப் போட்டியில் யார் இருப்பார்கள் என்பதை முடிவு செய்ய முடியும் என்று கூறும் லோபிரா , இந்த இரண்டு அணிகளும் இந்த சீசனில் மிக நன்றாக செயல்பட்டன.

இறுதிப் போட்டியின்போது நமது ரசிகர்களுக்கு ஒரு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுக்கவும், வெற்றிக் கோப்பையைக் கொண்டு வர முடியும் என்கிறார் செர்ஜியோ லோபிரா.

ISL 2019 - FC Goa vs Bengaluru FC Finals at Mumbai preview

பெங்களூரு அணி அல்லது கோவா அணி இரண்டில் ஒன்றுதான் ஐஎஸ்எல் கோப்பையை ஜெயிக்கும். ஆகவே இந்த இரு அணிகளும், வெற்றி பெற முடிந்த அளவு போராடும் என்கிறார் லோபிரா.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இருவருமே சிறப்பானவர்கள். இரு அணிகளுமே தற்போது மிகுந்த டென்ஷனில் உள்ளது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நாங்கள் வெற்றி பெற மிகச் சரியாக திட்டமிட்டுள்ளோம்.

ISL 2019 - FC Goa vs Bengaluru FC Finals at Mumbai preview

ஆனால் கால்பந்து போட்டியில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் நிகழும் என்கிறார் பெங்களுரு அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரெட்.

இந்த லீக்கின் கடைசி ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் கோவா என மிகச் சிறந்த இரு அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

கோவாவில் இந்த ஆண்டு லீக் போட்டிகளில் எதிர் அணிகளை சரமாரியாக வீழ்த்தி 42 கோல்களை அடித்துள்ளது. ஆனால் பெங்களூரு 35 கோல்களுக்கு மேல் அடிக்கவில்லை.

ISL 2019 - FC Goa vs Bengaluru FC Finals at Mumbai preview

ஐஎஸ்எல் கால்பந்து இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் பிடித்தமான நடுநிலை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளின் ரசிகர்களுமே அங்கு வருவார்கள். கடந்த 2014 சீசனின் போது அந்த ஆண்டின் தொடக்க ஆட்டம் மும்பையில் தான் நடந்தது. எதிர்பாராத விதமாக தற்போது இறுதிப் போட்டி மீண்டும் மும்பையில் நடைபெறவுள்ளது.

மும்பை மைதானம் ஒரு நடுநிலைமையான மைதானம். அதில் நடக்கப் போகும் இறுதிப் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் கோவா மற்றும் பெங்களூரு அணிகளின் கனவாக உள்ளது.

(Photos Courtesy - ISL)

Story first published: Wednesday, March 13, 2019, 21:53 [IST]
Other articles published on Mar 13, 2019
English summary
ISL 2019 - FC Goa vs Bengaluru FC Finals at Mumbai preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+