Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : டாப்பில் இருக்கும் கோவா அணிக்கு ஷாக் கொடுக்குமா சென்னை?

கோவா : கோவா ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் எஃப்சி கோவா அணிக்கும், சென்னையின் எஃப்சி அணிக்கும் ஆட்டம் நடைபெற்றாலும் கோவா அணி இந்த சீசன் ஐஎஸ்எல் போட்டிகளில் தற்போது இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

பெங்களூருக்கு எதிராக நடந்த கடந்த போட்டியில் கோவா அணி தோற்றுப் போனது. ஆனாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பு நடைபெறவுள்ள இந்த போட்டியில் கோவா அணி வெல்லும் என்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபிரா.

ISL 2019 - FC Goa vs Chennaiyin FC match no 87 preview

இந்த சீசன் ஐஎஸ்எல் போட்டிகளில் கோவா அணி அதிக கோல்களை அடித்துள்ளது. ஃபெரான் கொராமினாஸ் மற்றும் எடு பேடியா ஆகியோர் இந்த கோல்களை அடித்ததில் முக்கியமானவர்கள். அதே நேரத்தில் கோவா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முக்கிய காரணம் அந்த அணியினரின் தடுப்பாட்டம் தான். அதே நேரத்தில் பெங்களூருவில் அவர்கள் 0-3 என்ற கணக்கில் தோற்றிருந்தாலும், அதற்கு முன் ஒரு வரிசையில் கோவா அணியினர் ஐந்து கிளீன் ஷீட்டுகளை வைத்திருந்தனர்.

இந்த சீசனின் தொடக்கத்தில் நாங்கள் அடித்த கோல்கள் எங்களை முன்னேற்றுவதற்கு மிகவும் உதவியாக இருந்தன. தற்போது இந்த சீசனில் அதிக கோல்களை வைத்திருக்கும் அணிகளுள் நாங்களும் ஒருவர் என்கிறார் செர்ஜியோ லோபிரா.

ISL 2019 - FC Goa vs Chennaiyin FC match no 87 preview

பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவதற்கு முன்பு நாங்கள் இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது.

மோர்ட்டா ஃபால் இந்த அணிக்கு ஒரு முக்கியமான வீரராக உள்ளார். அதே நேரத்தில் மொராக்கோ நாட்டைச் சோந்த மிட்ஃபீல்டர் அஹ்மத் ஜஹுஹ் கோவா அணியில் உள்ளது பலமாக கருதப்படுகிறது.

சென்னை அணி பங்கு பெறும் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் சென்னை அணியினருக்கு சவாலாக இருக்கப் போவது அகமது ஜாகுல் தான்.

ISL 2019 - FC Goa vs Chennaiyin FC match no 87 preview

கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னையின் எஃப் சி அணி தற்போது ஒரு மோசமான சூழ்நிலையில் உள்ளது. இந்த போட்டியில் ஒரு கோல் அடித்தால்தான் புள்ளிக் கணக்கில் சென்னை அணி ஒரு இரட்டை இலக்கத்தைப் பெறும்.

சென்னை அணி வெறும் 9 புள்ளிகளை மட்டுமே பெற்று அட்டவணையில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளில் ஒரு மோசமான பதிவைத் தவிர்க்க சென்னை அணி ஒரு கட்டாய வெற்றியைப் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ISL 2019 - FC Goa vs Chennaiyin FC match no 87 preview

ஏனென்றால், இதற்கு முன்பு ஐஎஸ்எல் போட்டிகளில் கடைசி இடத்தைப் பிடித்திருந்த நார்த் ஈஸ்ட் அணி கூட 11 புள்ளிகளைப் பெற்றிருந்தது. தற்போது சென்னை அணி அதைவிட மோசமான நிலையில் உள்ளது.

அடுத்து ஏஎஃப்சி கோப்பை போட்டியில் பங்கு பெறுவதற்கு இந்த வெற்றி ஒரு தூண்டுகோலாக அமையும்.

கோவா அணியை வெற்றி கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன். இந்த சீசனில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அது முடியாமல் போய்விட்டது என்கிறார் சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி.

Story first published: Thursday, February 28, 2019, 13:09 [IST]
Other articles published on Feb 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+