Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : கடைசி போட்டியிலும் சென்னை தோல்வி.. கோவா எளிதான வெற்றி!!

கோவா : கோவாவில் பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கோவா அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

5 ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 87 ஆவது கால்பந்து போட்டி கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் எஃப்சி கோவா அணிக்கும் சென்னையின் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. சென்னை அணிக்கு இதுவே கடைசி போட்டி ஆகும். ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற கோவா அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - FC Goa vs Chennaiyin FC match no 87 report

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. ஆட்டத்தின் 26 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஃபெரான் கொராமினாஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்ததார்.

முதல் பாதியின் முடிவில் கூடுதலாக இரு அணிகளுக்கும் 1 நிமிடம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த 1 நிமிடத்திலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்தில் கோவா அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019 - FC Goa vs Chennaiyin FC match no 87 report

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 54 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கிறிஸ்டோபருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.. 62 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் எடு பேடியா வெளியேற்றப்பட்டு பிராண்டன் களம் இறக்கப்பட்டார்.

66 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் ரபேலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 66 மற்றும் 69 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலுமே சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019 - FC Goa vs Chennaiyin FC match no 87 report

தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் ஆட்டம் கடுமையாக இருந்ததால் இரு அணிகளுமே கோல் அடிக்க முடியவில்லை.

இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த 5 நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து கோவா அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

(Photos Courtesy - ISL)

Story first published: Friday, March 1, 2019, 10:46 [IST]
Other articles published on Mar 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+