For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஐஎஸ்எல்-இல் டாப் ஃபோரில் இடம் கிடைக்குமா? ஜாம்ஷெட்பூர் அணியை சந்திக்கும் கோவா!

கோவா : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் நான்காவது இடத்தைப் பிடிக்க இன்று கோவா ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கோவா எஃப்சி அணிக்கும், ஜாம்ஷெட்பூர் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறவுள்ளது.

இந்த சீசனில் ஜாம்ஷெட்பூருக்கு எதிரான ஆட்டத்தில் ஃபெரான் கொராமினாஸ் இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, கோவா அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

ISL 2019 - FC Goa vs Jamshedpur FC match no.63 preview

ஐஎஸ்எல் போட்டிகளில் இந்த இரண்டு அணிகளும் மூன்று முறை மோதியுள்ளன. அதில் இந்த அணிகள் 11 கோல்களை அடித்துள்ளன. இதில் முதல் இரண்டு ஆட்டத்தில் கோவா அணி வெற்றி பெற்றது. ஆனால் இதற்கெல்லாம் முன்பாக கோவா அணியின் தாக்குதல் ஆட்டம் குறித்து ஜாம்ஷெட்பூர் அணி அறிந்து வைத்திருந்தது.

ஜாம்ஷெட்பூர் அணி மிக நல்ல அணி. 100 சதவீதம் மிக சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். அவர்களை வெற்றி கொள்வது என்பது சற்று கடினம் எனக் கூறும் கோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபிரா, அவர்கள் மிகப் பெரிய போட்டியாளர்களாக இருப்பார்கள் என தெரிவித்தார்.

ISL 2019 - FC Goa vs Jamshedpur FC match no.63 preview

குளிர்கால இடைவேளைக்குப் பிறகு கோவா அணி தங்களது அணியில் சில முக்கியமான வீரர்களை சேர்த்துள்ளனர். கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் கோல் கீப்பர் தற்போது கோவா அணியில் இணைந்துள்ளார். இதே போல் நல்ல அனுபவம் பெற்ற மிட்பீல்டர் ஜெய்ட் குரோச்சி செர்ஜியோ லோபராவின் கீழ் விளையாட உள்ளார்.

நாங்கள் ஒரு நல்ல ஃபார்மில் இருந்தபோது இடைவேளையை எடுக்க விரும்பவில்லை. ஆனாலும் மிகக் கடுமையாக உழைத்து அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட தயாராக உள்ளோம் என்று செர்ஜியோ தெரிவித்தார்.

ISL 2019 - FC Goa vs Jamshedpur FC match no.63 preview

கோல்டன் பூட் பெற்றுள்ள நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்தலோமியின் சாதனையை கோவா அணியின் ஃபெரான் கொராமினாஸ் 10 கோல்கள் அடித்து சமன் செய்வாரா என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

மறுபுறம் ஜாம்ஷெட்பூர் அணியின் செர்ஜியோ காயம் அடைந்து வெளியேறிய நிலையில் தற்போது மீண்டும் களம் இறங்குகிறார். ஃபெரோண்டாவின் இந்த டீம் பல முறை போட்டிகளை டிரா செய்திருக்கிறது. ஆனால் மீதமுள்ள போட்டிகளில் விளையாடி கண்டிப்பாக நான்காவது இடத்தைப் பிடிப்போம் என்கிறார் ஜாம்ஷெட்பூர் அணியின் பயிற்சியாளர்.

இதனிடையே கார்சஸ் கால்வோ டைஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். இது போன்ற நிகழ்வுகள் பயிற்சியாளர் சீசர் ஃபெர்ரண்டோவை முடக்கிவிடும்.

ISL 2019 - FC Goa vs Jamshedpur FC match no.63 preview

மெமோ மற்றும் மரியோ ஆர்க்ஸ் ஆகியோரை மிட்ஃபீல்ட் இறக்கினால்தான் இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது களம் இறங்க உள்ள அகமது ஜஹுஹ், எடு பேடியா போன்றோரை சமாளிக்க முடியும்.

நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். அதே போல் அந்த அணியினரும் நான்காவது இடத்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக விளையாடுவார்கள். மேலும் அந்த அணியின் பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் மிக சிறந்தவர்கள், அதனால் நாங்கள் ஜாக்கிரதையாக விளையாடுவோம் என்கிறார் ஜாம்ஷெட்பூர் அணியின் பயிற்சியாளர் ஃபெராண்டோ.

Story first published: Monday, January 28, 2019, 11:59 [IST]
Other articles published on Jan 28, 2019
English summary
ISL 2019 - FC Goa vs Jamshedpur FC match no.63 preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+