For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : பழிவாங்கியே தீரணும்! கோவா அணிக்கு எதிராக களம் இறங்கும் மும்பை அணி!!

மும்பை : கோவா அணியிடம் தோற்ற அவமானத்தை துடைத்து அந்த அணியை பழி தீர்த்துக் கொள்வதற்காக மும்பை அரினா அரங்கில் இன்று (பிப்ரவரி 1) நடைபெறவுள்ள ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மும்பை அணி களம் இறங்குகிறது.

13 போட்டிகளில் விளையாடி 27 புள்ளிகளுடன் அட்டவணைக்கு இரண்டாவது இடத்தில் உள்ள மும்பை அணியுடன் ஆறு புள்ளிகள் பின் தங்கி இருக்கும் எஃப்சி கோவா அணி மோதுகிறது. இந்த லீக்கில் முதல் நான்கு இடத்துக்குத்தான் கடும் போட்டி.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC match no-66 preview

கோவா அணியை மும்பை அணி வீழ்த்தினால் 30 புள்ளிகள் பெற்று முதல் இடத்துக்கு முன்னேறும். மேலும் ஜாம்ஷெட்பூர் மற்றும் ஏடிகே அணிகளையும் எளிதில் வெல்லலாம்.

கடந்த போட்டியில் கோவா அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா, நட்சத்திர வீரர், சுபாஷ் போஸை இடது புறம் ஆட்டத்துக்கு மாற்றியது தான்.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC match no-66 preview

தொடர்ந்து விளையாடி யாராலும் வெல்லவே முடியாது என்ற நிலையில் இருந்த மும்பை அணி கடந்த முறை, பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தது. கோவா அணிக்கு எதிராக விளையாடிய போட்டி நாள் எங்களுக்கு ஒரு மோசமான நாள்.

அதற்கு பின்னர் எங்கள் அணி நன்றாக விளையாடத் தொடங்கியுள்ளது. ஆனால் எங்கள் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இறுதி முடிவு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக கடந்த முறை நடந்த ஆட்டம் போல் இருக்காது என்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC match no-66 preview

நாங்கள் எங்கள் ஸ்டைலில் விளையாடுவோம், அவர்கள், அவர்கள் ஸ்டைலில் விளையாடுவார்கள். அந்த அணி ஒரு நல்ல அணி. அந்த வீரர்கள் அனைவரும் ஒரு நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்தை எப்படி நகர்த்தி கொண்டு செல்ல வேண்டும் என்பது அவர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும் என்கிறார் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா.

அர்னால்டு இசோக்கோ எப்போதுமே எதிர் அணியினருக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறார்.

கோவா அணியை இலகுவாக வென்று விடலாம் என நினைத்துக்கூட பார்க்க முடியாது எனென்றால் மும்பை அணி 12 ஆட்டங்களில் 27 புள்ளிகள் எடுத்துள்ளது. கோவாவில் மும்பை அணியைத் தோற்கடித்ததில் இருந்து கோவா அணியினர் மிகுந்த உற்சாகத்தை பெற்றுள்ளனர். அதே வேகத்தில் அவர்கள் களம் இறங்க உள்ளனர். மேலும் தற்போது அவர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC match no-66 preview

இந்த லீக்கில் முதல் இடத்தைப் பிடித்துள்ள பெங்களூருவை தோற்கடித்தனர். எனவே நாம் நூறு சதவிகித உழைப்பை கொடுக்கவில்லை என்றால், அது ஒரு கடினமான விளையாட்டாக இருக்கும் என்கிறார் கோவாவின் உதவி பயிற்சியாளர் ஜீஸஸ் டேடோ.

கோவாவின் தாக்குதல் வலுவாக இருப்பதால் மும்பை சற்று பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் கோவாவின் தாக்குதலை எதிர் கொள்ள தயாராக உள்ளனர்.

Story first published: Friday, February 1, 2019, 10:54 [IST]
Other articles published on Feb 1, 2019
English summary
ISL 2019 - FC Goa vs Mumbai City FC match no-66 preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+