Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : மும்பை அணியை வீழ்த்தி கோவா அணி அபார வெற்றி!!

மும்பை : மும்பையில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கோவா அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 66வது கால்பந்து போட்டி மும்பையில் உள்ள மும்பை கால்பந்து அரினா அரங்கில் மும்பை எஃப்சி அணிக்கும் எஃப்சி கோவா அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற கோவா அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC match no-66 Report

தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. ஆட்டத்தின் 11 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் செரிட்டனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 18 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மிலன் சிங்கிற்கும், 23 ஆவது நிமிடத்தில் லூசியனுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டத்தின் 28 ஆவது கோவா அணியின் எடு பேடியா அற்புதமாக ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 42 ஆவது நிமிடத்தில் பவுலோ மச்சாடோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC match no-66 Report

இதையடுத்து ஆட்டத்தில் கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1 -0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. 52 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் மந்தர் ராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை அணி வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC match no-66 Report

68 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் எடு பேடியா வெளியேற்றப்பட்டு ஹியூகோ களம் இறக்கப்பட்டார். அடுத்து 79 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சுபாஷிஷ் போசிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC match no-66 Report

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 79 ஆவது நிமிடத்தில் கோவா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஃபெரான் கொராமினாஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார். 79 மற்றும் 83 நிமிடத்தில் அந்த இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC match no-66 Report

இதையடுத்து கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த 3 நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கோவா அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Story first published: Saturday, February 2, 2019, 10:22 [IST]
Other articles published on Feb 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+