For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : மும்பை அணியால் 6 கோல் அடிக்க முடியுமா? பரபரப்பான நிலையில் கடைசி அரையிறுதி ஆட்டம்!

கோவா : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கையை மும்பை அணி இழந்ததற்கு முக்கிய காரணம் அரையிறுதிப் போட்டியில் அந்த அணி 1 - 5 என்ற கோல் கணக்கில் கோவா அணியிடம் தோற்றது தான். இன்று (மார்ச் 12) கோவா ஃபடோர்டா ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கோவா அணியை எதிர்த்து மும்பை விளையாடுகிறது. இதில் மும்பை அணி எதிர்பாராத ஒரு அற்புதத்தை நிகழ்த்தி வெற்றி பெறும் நம்பிக்கையுடன் உள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC Semifinal Leg 2 match preview

கால்பந்து மற்றும் வாழ்க்கை இரண்டும் எப்போது, எப்படி மாறும் என்றே சொல்ல முடியாது. அது போல் கால்பந்து ஆட்டத்தின் முடிவை மாற்றுவது என்பது மிகவும் கடினமான காரியம்.

ஆனால் முடிவை மாற்றும் அளவுக்கு எங்கள் அணியில் ஒரு மாற்றத்தை உருவாக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்கிறார் ஜார்ஜ் கோஸ்டா. ஆறு அல்லது ஏழு கோல்கள் அடித்தால் மட்டுமே ஆட்டத்தின் முடிவுகள் மாறும்.

இதற்கு நான் பெரு முயற்சி எடுத்து வருகிறேன். ஆனால் முதல் லீக்கில் முடிவுகளை மாற்ற முடியும் என்பது கடினமான ஒன்று என்கிறார் ஜார்ஜ் கோஸ்டா.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC Semifinal Leg 2 match preview

மும்பை அணி அந்த ஆட்டத்தின்போது முதல் அரை மணி நேரத்தில் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு கோவா அணி செய்த மாயம் அதற்கு பெரு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.

லீக் போட்டிகளில் மும்பை அணி முதன் முதலாக கோவா சென்றபோது 0 - 5 என்ற கோல் கணக்கில் அடி வாங்கியது. முதல் லீக் போட்டியில் மும்பைக்கு எதிராக 12 கோல்கள் அடித்தன. இந்த ஐஎஸ்எல் தொடங்கிய பிறகு மூன்று ஆட்டங்களில் 24 கோல்களை அடித்துள்ளது. ஆனால் மும்பை அணி 9 கோல்கள் மட்டுமே அடித்துள்ளது. ஆனால் இவை எல்லாம் முன்பு நடந்தவை. தற்போது கோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபிரா இதை அவ்வளவு இலகுவாக விட்டுவிட மாட்டார்.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC Semifinal Leg 2 match preview

இந்த போட்டியை நாங்கள் மிகுந்த மரியாதையுடன் பார்க்கிறோம். ஏன் என்றால் நாங்கள் மோதப் போவது சாதாரண அணியல்ல. ஒரு சிறந்த டீம். அந்த அணியை நாம் இறுதி வரை பார்த்ததில்லை. ஆனால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என 100 சதவீத நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்கிறார் லோபிரா.

மொடுகு சவ்கோவின் பின்னால் முர்ட்டாடா விளையாடும்போது அவர் வீழ்ந்து விடுகிறார். இதே போல் பவுல் மச்சோடா மிட்ஃபீல்டில் விளையாடும்போது, அட்மிரல் ஜஹோவிற்கு எதிராக வெற்றியைப் பெற்றார். மறுபுறம் அர்னால்டு இஸ்சோவா வலது புறம் இருந்து விளையாடுவது தீப்பொறி போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC Semifinal Leg 2 match preview

7 பேர் உதவியுடன் ஃபெரான் கொராமினஸ் 16 கோல்களை அடித்து ஒரு அபாயகரமான வீரராக இருக்கிறார். மற்றொரு புறத்தில் மொமுகு சோகு 12 கோல்கள் அடித்து சிறந்த ஸ்ட்ரைக்கராக திகழ்கிறார்.

மும்பை அணி கோவா அணியை வீழ்த்துவதோடு மட்டுமல்லாமல் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற வேண்டும். அதற்கு மும்பை அணி ஒரு அதிசயத்தை நிகழ்த்த வேண்டும்.

(Photos Courtesy - ISL)

Story first published: Tuesday, March 12, 2019, 10:25 [IST]
Other articles published on Mar 12, 2019
English summary
ISL 2019 - FC Goa vs Mumbai City FC Semifinal Leg 2 match preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+