Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : கோவா அணியை வீழ்த்தியது மும்பை! இறுதிக்குள் நுழைந்தது கோவா!!

கோவா: கோவாவில் நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது லெக் கால்பந்து ஆட்டத்தில் கோவா அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

எனினும், முதல் லெக் அரையிறுதியில் 5-1 என்ற கோல் கணக்கில் கோவா வெற்றி பெற்று இருந்ததை அடுத்து, கோல்கள் வித்தியாச அடிப்படையில் கோவா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC Semifinal Leg 2 match Result

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது லீக் கால்பந்து போட்டி கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கோவா எஃப்சி அணிக்கும், மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும் இடையே நேற்று (மார்ச் 12) நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30க்கு தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி இடது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ஆட்டம் தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நடத்தது. இதைத் தொடர்ந்து 6 ஆவது நிமிடத்திலேயே மும்பை அணியின் ரஃபேல் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC Semifinal Leg 2 match Result

ஆட்டத்தின் 11 ஆவது நிமிடத்தில் மும்பை அணிக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கைநழுவிப் போனது.

பின்னர் 34 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் அகமதுவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 39 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் அகமது வெளியேற்றப்பட்டு எடு பேடியா களம் இறக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த இரண்டு நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் மும்பை அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC Semifinal Leg 2 match Result

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பிராண்டன் வெளியேற்றப்பட்டு மன்வீர் சிங் களம் இறக்கப்பட்டார்.

ஆட்டத்தின் 75 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ரெய்னர் வெளியேற்றப்பட்டு மொகமத் களம் இறக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 76 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ர*பேல் வெளியேற்றப்பட்டு மத்தியாஸ் களம் இறக்கப்பட்டார்.

இதே போல் 78 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஃபெரான் கொராமினாஸ் வெளியேற்றப்பட்டு சையத் களம் இறக்கப்பட்டார். 80 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் லூசியனுக்கும், கோவா அணியின் ஹீயுகோவுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - FC Goa vs Mumbai City FC Semifinal Leg 2 match Result

இதையடுத்து இரு அணிகளுக்கும் கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த 6 நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை.

இதையடுத்து கோவா அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இரண்டு அரையிறுதி ஆட்டங்களில் மும்பை அணியை விட நான்கு கோல்கள் கூடுதலாக அடித்த அணி என்ற அடிப்படையில் கோவா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இறுதிப் போட்டியில் கோவா, பெங்களூரு அணியை சந்திக்கிறது.

(Photos Courtesy - ISL)

Story first published: Wednesday, March 13, 2019, 10:31 [IST]
Other articles published on Mar 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+