Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : அரையிறுதியில் எஃப்சி கோவா அணி அதிக கோல்கள் அடித்து மும்பையை வீழ்த்தும்!!

மும்பை : கோவா அணியின் ரசிகர்கள் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் அரையிறுதி போட்டி களத்தில் மும்பைக்கு எதிராக ஆடும் ஆட்டத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கடந்த சீசனில் கோவா அணி அரையிறுதிப் போட்டியில் வெளியேற்றப்பட்டது போல் அல்லாமல், இந்த சீசனில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ISL 2019 - FC Goa will win the semi final against Mumbai city FC

இந்த சீசனில் இறுதிப் போட்டிக்கு போவதற்கு மும்பை அணியை கோவா அணி எதிர்த்து விளையாட உள்ளது. கோவா அணி கடந்த லீக் போட்டிகளில் 7 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை இன்னும் அதிகமாக பயிற்சி எடுத்துள்ளதால் வெற்றி எளிதாக இருக்கும்.

ஏற்கனவே லீக் ஆட்டத்தில் கணிசமான புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த அணி 18 போட்டிகளில் 20 கோல்கள் பெற்றுள்ளனர், மேலும் பயிற்சியாளர் செர்ஜியோ லோபிராவால் பாதுகாப்பைத் தடுக்க முயற்சிப்பதில் என்ற ஒரு தெளிவான மாற்றம் வந்துள்ளது.

ISL 2019 - FC Goa will win the semi final against Mumbai city FC

கோவா அணியின் எதிர் தாக்குதலை நிரூபிக்க எதுமே தேவையில்லை. கோவா அணி 36 கோல்களை அடித்துள்ளனர். அந்த அணியின் ஃபெரான் கொரோமியன்ஸ் அணிக்கு 15 கோல்களைக் அடித்துத் தந்துள்ளார்.

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு எங்கள் அணியில் பல பிரச்சனைகள் இருந்தன, ஆனால் இப்போது எங்கள் அணி எல்லா வகையிலும் முன்னேறி உள்ளது. வீரர்களின் ஆடும் திறனும் அதிகரித்துள்ளது. நாங்கள் எங்கள் இலக்கை அடைந்துவிட்டோம் என்றே சொல்ல வேண்டும். தற்போதைய இந்த நிலைமையை இறுதி வரை பராமரித்து வருவோம் என்கிறார் பயிற்சியாளர் செர்ஜியோ லோபிரா.

இடது புற ஆட்டக்காரர் மந்தர் ராவ் தேசாய் ஆட்டத்தில் அதிவேகமாக வளர்ந்துள்ளார். இதே போல் வலது புற ஆட்டக்காரர் செரட்டோன் பெர்னாண்டசும் நன்கு ஆடி வருகிறார்.

இதே போல் பின் பகுதியில் நின்று ஆடக்கூடிய அந்த 4 பேர் கொண்ட குழு, ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கி வைத்துள்ளது. ஆனாலும் கோவா அணி தற்போது தடுப்பாட்டத்தில் நல்ல ஃபார்மில் உள்ளது.

ISL 2019 - FC Goa will win the semi final against Mumbai city FC

கோவா அணியில் லோபிரா செய்த ஒரு பெரிய மாற்றம் அதிசயங்களைச் செய்துள்ளது என்றே சோல்ல வேண்டும். இளம் கோல்கீப்பர் முகமது நவாஸ் ஆட்டத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மிகுந்த அனுபவமுள்ள நவீன் குமார் மற்றும் லோபிரா ஆகியோர் பஞ்சாப் சிங்கம் நவாஸுக்கு ஒரு துணையாக உள்ளனர்.

இந்த சீசனில் தடுப்பாட்ட முறையைக் கொண்டு வந்த பெருமை செர்ஜியோ லோபிராவையை சேரும். இந்த தடுப்பாட்ட முறை கோவா அணிக்கு ஒரு பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது. எனவே இந்த சீசனை கோவா அணி வெற்றியுடன் முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Photos Courtesy - ISL)

Story first published: Monday, March 4, 2019, 18:30 [IST]
Other articles published on Mar 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+