For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : புனே மற்றும் ஏடிகே அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் டிராவில் முடிந்தது!!

புனே : புனேவில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் புனே மற்றும் ஏடிகே அணிகளின் ஆட்டம் 2 - 2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 74 ஆவது கால்பந்து போட்டி புனேவில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி சிவாஜி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் எஃப்சி புனே சிட்டி அணிக்கும், ஏடிகே அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஏடிகே அணி இடது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - FC Pune City vs ATK match complete result

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. 10 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஜெர்சனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தின் 17 ஆவது நிமிடத்தில் புனே அணியின் ஜான் ஜான்சன் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2019 - FC Pune City vs ATK match complete result

21 ஆவது நிமிடத்தில் புனே அணியின் சர்தக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் ஜெயேஸ் ரனே ஒரு கோல் அடித்தார். இதையடுத்து இரு அணிகளும் அடுத்த கோல் அடிப்பதற்காக ஆக்ரோஷமாக விளையாடின.

பின்னர் கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த இரண்டு நிமிடத்திலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதைடுத்து புனே மற்றும் ஏடிகே அணிகள் 1 - 1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் இருந்தன.

ISL 2019 - FC Pune City vs ATK match complete result

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 61 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் எடு கார்சியா ஒரு கோல் அடித்தார்.

63 மற்றும் 64 ஆவது நிமிடத்தில் புனே அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் புனே அணியின் டையாசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதே போல் 67 ஆவது நிமிடத்தில் புனே அணியின் ஷாகில் பன்வாருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - FC Pune City vs ATK match complete result

இதையடுத்து ஆட்டத்தின் 74 ஆவது நிமிடங்களில் ஏடிகே அணியில் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 76 ஆவது நிமிடத்தில் புனே அணியின் ராபின் சிங் ஒரு கோல் அடித்தார்.

ISL 2019 - FC Pune City vs ATK match complete result

இதையடுத்து கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த மூன்று நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து புனே மற்றும் ஏடிகே அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 2 - 2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

(Photos Courtesy - ISL)

Story first published: Monday, February 11, 2019, 11:57 [IST]
Other articles published on Feb 11, 2019
English summary
ISL 2019 - FC Pune City vs ATK match complete result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+