For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : பிளே-ஆஃப் செல்ல போராட வேண்டிய கட்டாயத்தில் புனே - ஏடிகே அணிகள்!

புனே : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் அடுத்து ஒரு வெற்றியைப் பெற்றால் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் புனே சிட்டி மற்றும் ஏடிகே அணிகள் உள்ளன. இந்த இரு அணிகளுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கடுமையான போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

ஏடிகே அணி 14 போட்டிகளில் விளையாடி 20 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அந்த அணி நான்காவது இடத்துக்கு முன்னேற இன்னும் 4 புள்ளிகள் தேவைப்படுகின்றன. புனே சிட்டி அணி 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அந்த அணி நான்காவது இடத்தைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இன்னும் 5 போட்டிகளில் புனே அணி விளையாட உள்ளது.

ISL 2019 - FC Pune City vs ATK match No-74 preview

புனே சத்ரபதி சிவாஜி ஸ்டேடியத்தில் இந்த இரு அணிகளும் வெற்றி என்ற இலக்குடன் நாளை நேருக்கு நேர் மோத உள்ளன. புனே அணி தான் ஆடிய கடந்த 3 போட்டிகளில் சமனில் முடிந்தது. சென்னை அணியுடன் மட்டும் 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதையடுத்து தங்கள் அணி தடுப்பாட்டத்தில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் புனே அணியின் புதிய பயிற்சியாளர் பில் பிரௌன்.

ISL 2019 - FC Pune City vs ATK match No-74 preview

நாளைய ஆட்டத்தில் எங்களது அணி வெற்றி பெற வேண்டும் என்ற திட்டம் உள்ளது. கடந்த வாரம் சென்னை அணியுடன் விளையாடி வெற்றி பெற்றோம், இதை முதலில் இருந்தே செய்திருக்க வேண்டும். நாங்கள் புள்ளி அட்டவணையில் பின்தங்கி இருந்தாலும் அடுத்தடுத்து வெற்றியைப் பெறுவோம் என்றும் அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் குறிப்டுகிறார் பில் பிரவுன்.

ஏடிகே அணிக்கும் அதே நிலைதான். குளிர்கால இடைவேளைக்கு முன்பு வரை 12 ஆட்டங்களில் 10 கோல்கள் மட்டுமே அந்த அணி எடுத்திருந்தது. ஏடிகே அணிக்கு எடு கார்ஸியா வந்த பிறகு மற்ற அணிகளுக்கு ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதே போல் காலு உச்சேவும் களம் இறங்கியிருப்பதால் ஆட்டம் இனி சூடு பிடிக்கும் என்கிறார் பயிற்சியாளர் ஸ்டீவ் காப்பல்.

ISL 2019 - FC Pune City vs ATK match No-74 preview

ஏடிகே அணிக்கு இன்னும் ஒரு வெற்றி கிடைத்தால் நார்த் ஈஸ்ட் அணியை பின்னுக்குத் 4 ஆவது இடத்துக்கு முன்னேற முடியும். அது வெற்றியை நோக்கிய ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

வெற்றி பெற வேண்டும் என்ற மன நிலையை ஒவ்வொரு ஆட்டத்துக்கும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். முதல் நான்கு இடத்துக்குள் நாங்கள் வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இறுதி மூன்று ஆட்டத்திற்குள் நாங்கள் இருப்போம் என்கிறார் காப்பல்.

ISL 2019 - FC Pune City vs ATK match No-74 preview

புனே அணிக்கு எதிரான ஆட்டங்களில் ஏடிகே அணி அப்படி ஒன்றும் பிரமாதமாக விளையாடவில்லை என்றே பதிவுகள் கூறுகின்றன. இரு தரப்பினருக்குமான 9 ஆட்டங்களில் ஏடிகே அணி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே ஏடிகே அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றால் புனே அணிதான் தனது வெற்றியைத் தொடரும்.

Story first published: Sunday, February 10, 2019, 11:46 [IST]
Other articles published on Feb 10, 2019
English summary
ISL 2019 - FC Pune City vs ATK match No-74 preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+