Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : புனே அணியை வீழ்த்திய டெல்லி டைனமோஸ்.. 3 கோல் அடித்து அபார வெற்றி!!

புனே : புனேவில் பிப்ரவரி 24 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் டெல்லி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 85 ஆவது கால்பந்து போட்டி புனேவில் உள்ள ஸ்ரீஷிவ் சத்ரபதி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் எஃப்சி புனே சிட்டி அணிக்கும், டெல்லி டைனமோஸ் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற புனே சிட்டி அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - FC Pune City vs Delhi Dynamos FC match no 85 full report

முதல் 15 நிமிடங்களுக்கு ஆட்டம் விறுவிறுப்பில்லாமல் இருந்தது. இதையடுத்து ஆட்டத்தின் 17 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் லாலியான்சுலா அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 18 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் ஆட்ரியாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் புனே அணியின் நிகில் ஒரு கோல் அடித்தார். பின்னர் ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் ரோமியோ ஒரு கோல் அடித்தார். 32 ஆவது நிமிடத்தில் புனே அணியின் ஆஷிஷ் குருனியனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - FC Pune City vs Delhi Dynamos FC match no 85 full report

ஆட்டத்தின் 37 ஆவது நிமிடத்தில் புனே அணியில் மாற்றம் செய்யப்பட்டது. ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் புனே அணியின் இயாம் ஹியூமுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த இரண்டு நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதியில் புனே மற்றும் டெல்லி அணிகள் 1 - 2 என்ற கோல் கணக்கில் இருந்தது.

ISL 2019 - FC Pune City vs Delhi Dynamos FC match no 85 full report

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 52 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் டேனியல் ஒரு கோல் அடித்தார். 57 ஆவது நிமிடத்தில் புனே சிட்டி அணியின் சர்த்தக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

66 ஆவது நிமிடத்தில் டெல்லி டைனமோஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 73 மற்றும் 75 ஆவது நிமிடங்களில் டெல்லி மற்றும் புனே அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஆட்டத்தின் 76 ஆவது நிமிடத்தில் புனே அணியின் மார்சிலோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 85 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் டேனியல் வெளியேற்றப்பட்டு சுபம் சாரங்கி களம் இறக்கப்பட்டார்.

ISL 2019 - FC Pune City vs Delhi Dynamos FC match no 85 full report

ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் புனே அணியின் மார்சிலோவுக்கு மீண்டும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லி டைனமோஸ் அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பின் டெல்லி அணி எட்டாவது இடத்திலும், புனே அணி ஏழாவது இடத்திலும் தொடர்கின்றன.

(Photos Courtesy - ISL)

Story first published: Monday, February 25, 2019, 8:42 [IST]
Other articles published on Feb 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+