Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : புனே, டெல்லி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா?

புனே : புனே மற்றும் டெல்லி அணிகள் தாமதமாக நன்றாக விளையாடத் தொடங்கியுள்ளன. அத்தகைய இரண்டு அணிகளும் இன்று (பிப்ரவரி 24) புனே ஸ்ரீ ஷிவ் சத்ரபதி சிவாஜி ஸ்டேடியத்தில் மோத உள்ளன.

புனே அணியைப் பொறுத்தவரை புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்ட பின் அந்த அணி தற்போது நல்ல ஃபார்மில் உள்ளது. அந்த அணி தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. புனே அணி வீரர்களின் ஆட்டமும் தற்போது மிக நன்றாக உள்ளது.

ISL 2019 - FC Pune City vs Delhi Dynamos FC match no 85 preview

புனே அணியின் புதிய பயிற்சியாளராக பில் பிரௌன் நியமிக்கப்பட்ட பிறகு இரண்டு முழு வெற்றிகளும், சில டிராக்களையும் பெற்றுள்ளார். அவரது விளையாட்டு முறை வித்தியாசமாக இருந்தது.

நாங்கள் கடுமையாக உழைக்கிறோம், எதிர் அணி வீரர்கள் குறித்து நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். அவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை நன்கு படித்து வைத்திருக்கிறோம். ஒரு சில போட்டிகளில் டெல்லி அணியினர் நன்றாக விளையாடுகிறார்கள். ஆனால் ஒரு சில போட்டிகளில் அவர்கள் நன்றாக விளையாடுவதில்லை. எனவே இந்த ஆட்டத்தில் நாங்கள் டெல்லி அணியை ஜெயிப்போம் என்கிறார் பில் பிரௌன்.

ISL 2019 - FC Pune City vs Delhi Dynamos FC match no 85 preview

புனே அணியின் மார்சிலோனா, ராபின் சிங், இயான் ஹியூம் மற்றும் மார்கோ ஆகியோர் டெல்லி அணிக்கு பெரும் சவாலாகவே இருக்கிறார்கள். டெல்லி அணியின் பயிற்சியாளர் ஜோசப் கொம்பாவ் இதை நன்கு உணர்ந்துள்ளார்.

கிறிஸ்துமஸ்க்குப் பிறகு புனே அணி நன்றாக விளையாடத் தொடங்கியுள்ளது. அவர்களது தடுப்பாட்டம் நன்றாக இருக்கிறது. மேலும் அவர்கள் கடந்த சில ஆட்டங்களில் நிறைய கோல்களை அடித்துள்ளனர் . ஒற்றுமையாக விளையாடும் அந்த அணியின் போக்கு எங்கள் அணிக்கு பெரும் சவால் என்கிறார் ஜோசப் கொம்பாவ்.

ISL 2019 - FC Pune City vs Delhi Dynamos FC match no 85 preview

புனே அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் மிட் பீல்டர் அடில் கான், இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

டெல்லி டைனமோஸ் அணியைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி பெங்களூரு அணியை 3 - 2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. புதிய வீரரான யுலீசஸ் டேவிலா மற்றும் டேனியல் லால்ஹிம்புளா ஆகியோரின் ஆட்டம் அந்த அணிக்கு கைகொடுக்கும்.

ISL 2019 - FC Pune City vs Delhi Dynamos FC match no 85 preview

டெல்லி அணியைப் பொறுத்தவரை ஆறு போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடினாலும் பிளே ஆஃப் சுற்றுக்குள் வர முடியாமல் போய்விட்டது. ஆனால் இந்த சீசனின் இறுதிக்கு வந்துள்ள அந்த அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் என நம்புகிறார் அதன் பயிற்சியாளர் ஜோசப் கொம்பாவ்.

Story first published: Sunday, February 24, 2019, 17:35 [IST]
Other articles published on Feb 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+