Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : புனே அணியை வீழ்த்தி கெத்து காட்டுமா மும்பை அணி?

புனே : புனே ஸ்ரீசிவ் சத்ரபதி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் இன்று (மார்ச் 2) நடைபெறவுள்ள ஹீரா இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை அணி புனே அணியை ஜெயிக்குமா?

மும்பை அணியினர் ஏற்கனவே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டனர். அட்டவணையில் மூன்றாவது இடத்தில் உள்ள மும்பை அணி கேரளா, நார்த் ஈஸ்ட் போன்ற அணிளை ஜெயித்து முன்னேறியுள்ளது. இது மும்பை அணிக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்கிறார் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்ட்டா.

ISL 2019 - FC Pune City vs Mumbai City FC match no 89 preview

ஒரு சர்வதேச இடைவேளைக்குப் பிறகு மும்பை அணி மிக நன்றாக விளையாடத் தொடங்கியது. ஜனவரி மாதத்தில் ஏடிகே அணிக்கு எதிராக விளையாடி 3 - 1 என்ற கோல் கணக்கில் ஜெயித்த போதே அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி முதல் நான்கு இடத்துக்குள் வந்து விட்டது.

மொடுகு சோகு ஹாட்ரிக் கோல் அடித்தார். சோவிக் சக்ரபோர்டி மற்றும் செஹநாஜ் சிங் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறி இருந்தாலும் மும்பை அணி சிறப்பாக விளையாடியது.

ISL 2019 - FC Pune City vs Mumbai City FC match no 89 preview

இந்த போட்டியில் யாருக்கும் ஓய்வு கிடையாது. இரண்டு வீரர்கள் காயம் காரணமாகவும், இரண்டு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதாலும் விளையாட மாட்டார்கள். மற்ற அனைவரும் விளையாடுவார்கள் என்கிறார் ஜார்ஜ் கோஸ்டா.

கடந்த போட்டியில் புனே அணியை 2 -0 என்ற கோல் கணக்கில் மும்பை அணி தோற்கடித்தால் அந்த அணியை பழிக்கு பழி வாங்க காத்திருக்கிறது. புள்ளி அட்டவணையில் புனே அணி 6 ஆவது இடத்தில் இருந்தாலும் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்கிறார் பயிற்சியாளர் பில் பிரௌன்.

ISL 2019 - FC Pune City vs Mumbai City FC match no 89 preview

பில் பிரௌன் பொறுப்பேற்ற பிறகு புனே அணி நன்கு விளையாடி வருகிறது. 5 போட்டிகளில் 4 ல் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு ஏற்பட்ட தோல்விகளை சரி செய்ய பில் பிரௌன் பெரு முயற்சி எடுத்து வருகிறார்.

ISL 2019 - FC Pune City vs Mumbai City FC match no 89 preview

மார்சினோஹோ மற்றும் மிட் பீல்டர் மார்ட்டின் டயஸ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது அந்த அணிக்கு பெரும் சவாலாக உள்ளது. அதே நேரத்தில் விங்கர் ஆஷிக் குரூனியன் காயத்தால் விளையாடவில்லை.

புனே சிட்டி அணியின் ஐயன் ஹியூம் மற்றும் டியாகோ கார்லோஸ் ஆகிய இருவரை முன்னிலைப்படுத்தியே இன்றைய ஆட்டம் உள்ளது. இதனால் வெற்றியுடன் தங்கள் சீசனை புனே அணியினர் முடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

(Photos Courtesy - ISL)

Story first published: Saturday, March 2, 2019, 14:34 [IST]
Other articles published on Mar 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+