For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி புனே அணி அபார வெற்றி!!

புனே : புனேவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் புனே அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 89 ஆவது கால்பந்து போட்டி புனேவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் எஃப்சி புனே சிட்டி அணிக்கும் மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - FC Pune City vs Mumbai City FC match no 89 report

தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. ஆட்டத்தின் 6 ஆவது நிமிடத்தில் புனே அணியின் மேட் மிட்சுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தின் 18 ஆவது நிமிடத்தில் புனே அணியின் அடில்கான் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2019 - FC Pune City vs Mumbai City FC match no 89 report

இதைத் தொடர்ந்து 36 ஆவது நிமிடத்தில் புனே அணியின் அடில் கானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அடுத்து 41 ஆவது நிமிடத்தில் புனே அணியின் குர்தெஜ் சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த இரண்டு நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் புனே அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019 - FC Pune City vs Mumbai City FC match no 89 report

இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 57 ஆவது நிமிடத்தில் புனே அணியின் மார்கோவிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 73 மற்றும் 76 ஆவது நிமிடத்தில் ரோகித் மற்றும் சர்கத்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்ட்டது.

ISL 2019 - FC Pune City vs Mumbai City FC match no 89 report

ஆட்டத்தின் 84 நிமிடத்தில் புனே அணியின் இயான் ஹியூம் ஒரு கோல் அடித்தார். 87 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மிலன் சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - FC Pune City vs Mumbai City FC match no 89 report

இதையடுத்து ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் அர்னால்டு அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து புனே மற்றும் மும்பை அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 2 - 1 என்ற கோல் கணக்கில் புனே அணி அபார வெற்றி பெற்றது.

Story first published: Monday, March 4, 2019, 9:55 [IST]
Other articles published on Mar 4, 2019
English summary
ISL 2019 - FC Pune City vs Mumbai City FC match no 89 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+