For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : கோவாவின் கோல் மன்னன் ஃபெரான் கொராமினாஸ்! கோல்டன் பூட் வெல்வாரா?

கோவா : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கடந்த இரண்டு சீசன்களில் நட்சத்திர வீரர் ஃபெரான் கொராமினாசின் பெயர் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாக அமைந்து விட்டது.

கோவா எஃப்சி அணியின் ஸ்பானிஷ் ஸ்ட்ரைக்கர் கொராமினாஸ் ஏற்கனவே 34 கோல்களை அடித்திருக்கிறார், தற்போது இரண்டாவது சீசனிலும் அவரது வேகம் முடிவுக்கு வரவில்லை.

ISL 2019 - Goa hero Corominas already hit 16 goals this season

முதல் சீசனில் நெருப்பு போன்ற அவரது ஆட்டத்தால் கொராமினாஸ் 18 கோல்கள் அடித்தார். தற்போது இந்த சீசனிலும் அவர் விடாமல் 16 கோல்களை அடித்துள்ளார். இது ஒரு நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. பெங்களூரு அணியின் சுனில் ஷட்டரி இறுதியாக 9 கோல்களை அடித்துள்ளார்.

ஃபெரான் கொராமினாஸ் வெற்றிகரமான இரண்டாவது ஆண்டாக கோல்டன் பூட் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனைவிட இந்த சீசன் தொடக்கத்தில் கொராமினாஸ் பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

கொராமினாசும், மேனுவல் லேன்சரோட்டும் இணைந்து நெருப்பைப் போல் கோவா அணிக்காக விளையாடினார்கள்.

ஆனால் இந்த சீசனில் லான்சரோட் ஏடிகே அணிக்காக விளையாட கையெழுத்திட உள்ளார். ஆனால் அதை கொராமினாசால் தடுத்து நிறுத்த முடியாது. கோல்கள் பல காரணிகள் மூலம் வரும். அதே நேரத்தில் ஒரு ஜோடிகளால் இணைந்து பல கோல்களை அடிக்க முடியும் என்றால் அது கொராமினாஸ் மற்றும் மேனுவல் லேன்சரோட் ஜோடியால் தான்.

எங்கள் அணியில் நாங்கள் தனித் தனியாக விளையாடுவதில்லை என கூறுகிறார் கொராமினாஸ்.

கடந்த இரண்டு சீசன்களில் செர்ஜியோ லோபிராவின் அணி ஐஎஸ்எல்லில் உள்ள ஒவ்வொரு அணியையும் வென்றது. இதில் கொராமினாசின் அணுகுமுறை சிறப்பாக இருந்ததால் கோவா அணிக்கு அது வெற்றியைத் தந்தது.

ISL 2019 - Goa hero Corominas already hit 16 goals this season

கொராமினாஸ் குறித்து கருத்து தெரிவித்த செர்ஜியோ லோபிரா, அவர் ஒரு சிறந்த விளையாடு வீரர்...அவருடைய ஆட்டம் தரமானது... மிகச் சிறந்த வீரர்களும் அவரும் ஒருவர்....அவர் கூடவே நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

அதிக புள்ளிகளைப் பெற்றவர்களின் பட்டியலில் கொராமினாஸ் பெயர் இரண்டாவதாக உள்ளது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் கொராமினாசின் பாதங்கள் தொழில்நுட்ப ரீதியாக மிக சிறந்ததாக உள்ளது.

இந்த ஸ்பானிஷ் ஸ்ட்ரைக்கர் ஏற்கனவே இரண்ட கோல்டன் பூட் அவார்டுகளைப் பெற்றுள்ளார். ஆனால் இறுதிப் போட்டியில் வெல்வதே அவரின் மிகப் பெரிய பரிசாக இருக்கும். கோவா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கொராமினாசின் கண்கள் ஐஎஸ்எல் கோப்பை மீதே உள்ளது. இதைத்தான் ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். கோல்டன் பூட் மற்றும் ஐஎஸ்எல் டிராபி இரண்டுமே கொராமினாசின் கனவுகள். அவரால் மட்டுமே ஐஎஸ்எல் டிராபியை பெற முடியும்.

(Photos Courtesy - ISL)

Story first published: Wednesday, March 13, 2019, 21:03 [IST]
Other articles published on Mar 13, 2019
English summary
ISL 2019 - Goa hero Corominas already hit 16 goals this season
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+