Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : பெங்களூரு பார்மில் இருக்கா? ஜாம்ஷெட்பூரை வெல்லுமா? பரபரப்பான லீக் போட்டி!

ஜாம்ஷெட்பூர் : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை பெற சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்.

இந்த சீசனில் அதிக புள்ளிகள் எடுத்த பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால், சர்வதேச இடைவேளைக்குப் பிறகு பெங்களூரு அணியின் ஆட்டம் சிறப்பாக இல்லாதது அதன் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரெட்டுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.

ஆனால் கோவா அணிக்கு எதிராக அந்த அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிறகு தற்போது அந்த அணி ஃபார்முக்கு திரும்பியுள்ளது.

ISL 2019 - Jamshedpur FC vs Bengaluru FC match no 86 preview

இதையடுத்து பெங்களூரு அணி இன்று (பிப்ரவரி 27) ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜெஆர்டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ மைதானத்தில் ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

ISL 2019 - Jamshedpur FC vs Bengaluru FC match no 86 preview

கடந்த 6 ஆட்டங்களில் பெங்களூரு அணி இரண்டு ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி இது வரை ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் தலா ஒவ்வொரு அணியும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த போட்டியில் 2 - 2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவானது.

இது குறித்து கருத்து தெரிவித்த பெங்களூரு அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரெட். தங்கள் அணி தற்போது தோல்வியில் இருந்து மீண்டுள்ளது என்றார். மூன்று தோல்வி மற்றும் ஒரு டிராவுக்குப் பிறகு அந்த அணி தற்போது புத்துணர்வு பெற்றுள்ளது.

ISL 2019 - Jamshedpur FC vs Bengaluru FC match no 86 preview

இந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை பெறுவதே எங்கள் லட்சியம் என்று கூறும் குவாட்ரெட், நாங்கள் மோதப் போவது இரண்டாவதோ அல்லது மூன்றாவதோ இடத்தைப் பிடிப்பதற்காக அல்ல என் தெரிவித்தார். எங்களிடம் இருந்த சில முக்கியமான வீரர்கள் தற்போது இல்லை. இனிமேல் எங்கள் வீரர்கள் காயம் காரணமாக வெளியேற மாட்டார்கள் என்றார்.

ISL 2019 - Jamshedpur FC vs Bengaluru FC match no 86 preview

ஜாம்ஷெட்பூர் அணியைப் பொறுத்தவரை இந்த சீசனில் ஒரு கலவையான வெற்றி தோல்வியைப் பெற்றுள்ளது. இந்த ஐஎஸ்எல் சீசனில் 9 டிராக்களைப் பெற்றுள்ளது. புனே அணியுடனான கடந்த ஆட்டத்தில் 1 - 4 என்ற கோல் கணக்கில் தோல்வி மற்றும் சென்னை அணியுடன் தோல்வி என அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்த ஆட்டத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக்கை அந்த அணிக்கு தகர்ந்து போனது.

பல போட்டிகளில் எங்கள் அணி டிராக்களையே பெற்றது. இதன் காரணமாக முதல் நான்கு இடங்களுக்குள் வர முடியாமல் போனது பெரிய ஏமாற்றம் என்கிறார் ஜாம்ஷெட்பூர் அணியின் பயிற்சியாளர் சீசர் ஃபெராண்டோ.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் ஜாம்ஷெட்பூர் வெற்றி பெறுமா? என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது.

எங்களது சொந்த மண்ணில், சொந்த ரசிகர்களுக்கு முன்பு நாங்கள் ஆடப் போகும் கடைசி ஆட்டம் இது தான். அதனால் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி பெங்களூரு அணியை தோற்கடிப்பார்கள் என்கிறார் ஜாம்ஷெட்பூர் அணியின் பயிற்சியாளர் சீசர் ஃபெராண்டோ.

(Photos Courtesy - ISL)

Story first published: Wednesday, February 27, 2019, 9:51 [IST]
Other articles published on Feb 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+