Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : மும்பை அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி அபார வெற்றி!!

ஜாம்ஷெட்பூர் : ஜாம்ஷெட்பூரில் பிப்ரவரி 8 அன்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 72 ஆவது கால்பந்து போட்டி ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாடா காம்ப்ளக்ஸ் ஸ்டேடியத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கும் மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை சிட்டி அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - Jamshedpur FC vs Mumbai City FC match Result

ஆட்டத்தின் 8 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ராபினுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 27 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த அணி அதை நழுவவிட்டது.

அடுத்து 31 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சௌபிக் சக்ரபர்த்திக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 35 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பிரதிக் சௌத்ரிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - Jamshedpur FC vs Mumbai City FC match Result

இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக மோதின. ஆனால் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த இரண்டு நிமிடத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் மற்றும் மும்பை அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதைத் தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் 63 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மொடுகு சோகுவுக்கு மஞ்சள்அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 63 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

இதே போல் 68 ஆவது நிமிடத்தில் மும்பை அணியிலும் மாற்றம் செய்யப்பட்டது. ஆட்டத்தின் 75 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் லூசியனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்ப்ட்டது.

ISL 2019 - Jamshedpur FC vs Mumbai City FC match Result

இதையடுத்து ஆட்டத்தின் 79 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பிரதிக் சௌத்திரி வெளியேற்றப்பட்டு முபாசிர் ரஹ்மான் களம் இறக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மீமோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

பின்னர் 85 ஆவது நிமிடத்தில் மும்பை அணியிலும், 87 ஆவது நிமிடத்தில் ஜாட்ஷெட்பூர் அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

ISL 2019 - Jamshedpur FC vs Mumbai City FC match Result

அந்த நான்கு நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் எதுவுமே போடவில்லை. இதையடுத்து ஜாம்ஷெட்பூர் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Story first published: Saturday, February 9, 2019, 11:45 [IST]
Other articles published on Feb 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+