Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : நீண்ட காலம் போராடி ஒரு கோல் அடித்த சென்னையின் ஜெஜெ! ஆனால் என்ன பயன்?

மும்பை : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் சென்னையின் எஃப் சி அணிக்காக விளையாடியது நட்சத்திர வீரரான ஜெஜே லல்பேகுளவா ஒரு மறக்க முடியாத அனுபவம். கடந்த சீசனில் வெற்றி அணியாக சென்னை அணி இருந்தது. ஆனால் இந்த சீசனில் பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

சென்னை அணி கடந்த 15 ஆட்டங்களில் நேற்றைய போட்டியில்தான் இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஜெஜெ. அவர் மிகச் சிறந்த வீரராக இருக்கிறார். நிஷு குமாரின் வாய்ப்பினை ஜெஜேக்கு வழங்குவதன் மூலம் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

ISL 2019 - Jeje finds his scoring boots for Chennaiyin FC

பெங்களூரு கோல்கீப்பர் குருபீத் சிங் சந்து பந்தை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதன் மூலம் ஜெஜெ ஒரு நல்ல வீரர் என்பதை உறுதிப்படுத்தினார்.

ஒருவேளை ஜெஜெவும், சென்னை அணியும், அதிர்ஷ்டசாலியாக இருந்திருந்தால் அது அனைத்து சீசன்களையும் வென்றிருக்கும்.

நீண்ட காலம் உழைத்ததில் இறுதியாக எனக்கு அந்த கோல் கிடைத்தது. எனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு எனது நன்றி. ஒவ்வொரு நாளும் நாங்கள் பயிற்சியின்போது போராடி வருகிறோம் என்கிறார் கடந்த 5 சீசன்களில் அதிக புள்ளிகளைப் பெற்ற இந்திய வீரரான ஜெஜெ.

ISL 2019 - Jeje finds his scoring boots for Chennaiyin FC

ஆனாலும் சென்னை அணி இந்த சீசனில் ஒரு மோசமான நிலையில் உள்ளது, ஆனால் அதற்கு ஜெஜெ காரணம் அல்ல. இந்த சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் சென்னை அணியின் புள்ளி விபரங்களும் மிக மோசமானதாகவே இருந்துள்ளது.

ஆனால் இந்த சீசன் முழுவதும் பல ஆட்டங்களில் ஜெஜெவின் திறமையான விளையாட்டு வீணாகிப் போனது.

ஜெஜெ பந்தைக் கடத்திச் சென்று அதை கோலாக மாற்றாதபோது அது ஒரு பெரிய இழப்பு மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையும் இழக்க வேண்டியுள்ளது.

மிசோரமில் பிறந்த ஜெஜெ லீக் வரலாற்றில் மிக முக்கிய இலக்கை எட்டியது. பெங்களூருவுக்கு எதிரான வெற்றிக்கு முன்னர் ஜெஜெ 22 கோல் அடித்திருந்தார்.

ஜெஜெவின் புள்ளி சதவீதம் அவரது முந்தைய இரண்டு சீசனிகளில் 27 சதவிகிதத்தை எட்டியிருந்த நிலையில் தற்போது அது 12 சதவீதத்திற்கு கீழ் வந்துள்ளது.

தற்போது 23 வது ஐஎஸ்எல் கோல்களுடன், ஜெஜே அவரது புள்ளிகளை மீண்டும் தொடுவார் என எதிர்பாக்கப்படுகிறது.

ஆசியக் கோப்பை 2019 ல் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு தாய்லாந்துக்கு எதிரான ஜெஜெவின் ஆட்டம் தான் முக்கியமாக இருந்தது. இந்த இலக்கு அடுத்தடுத்து தொடர்கிறது.

சென்னை அணியின் தோல்விக்கு ஜெஜெவின் ஆட்டங்கள் ஒரு வெளிச்சப் புள்ளியைத் தரலாம். ஏஎஃப்சி கோப்பை, ஹீரோ சூப்பர் கோப்பை மூலம் சென்னை அணி மற்றும் ஜெஜெ மீண்டும் ஒரு உச்சத்துக்கு வரலாம்.

(Photos Courtesy - ISL)

Story first published: Tuesday, February 12, 2019, 19:04 [IST]
Other articles published on Feb 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+