Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : பயிற்சியாளர் கோஸ்டாவை நம்பி இருக்கும் மும்பை.. அரையிறுதியில் வெற்றி தேடித் தருவாரா?

மும்பை : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளின் தொடக்கத்தில் மீண்டும் மும்பை அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறாது என்ற நிலைதான் இருந்து வந்தது. ஆனால் அந்த அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டாவின் அணுகுமுறைகளும், கடின உழைப்பும் தற்போது அந்த அணியை முதல் நான்கு இடங்களுக்குள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

மும்பை அணி ஒரே ஒரு முறை மட்டும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் இறுதிப் போட்டியில் அது பங்கேற்றதில்லை. தற்போது மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பயிற்சியளார் கோஸ்டாவின் அணுகுமுறைகள் அந்த அணியை ஜெயிக்க வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ISL 2019 - Jorge Costa is the hope of Mumbai City FC in semifinals

இந்த சீசன் முழுவதும் பயிற்சியாளர் கோஸ்டாவின் வித்தியாசமான அணுகுமுறை மும்பை அணியின் திறமையை வெளிக்கொண்டுவரும் விதமாக இருந்தது. கேரளா அணியுடனான போட்டியில் 6 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது போன்ற பல வெற்றிகள் தற்போது மும்பை அணியை அரையிறுதியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

மும்பை அணி ஜாம்ஷெட்பூர் அணியை விட குறைவான புள்ளிகளையே பெற்றிருந்தது. ஆனால் கோஸ்டாவின் சிறந்த பயிற்சியால், அந்த அணியைப் பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஒரு பயிற்சியாளராக எனது அனுபவத்தில் சொல்கிறேன், அரையிறுதிப் போட்டியில் மூன்று கோல்கள் அடித்தாலே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடலாம் என நினைக்கிறேன் என்கிறார் கோஸ்டா. உலக அளவில் நடைபெற்ற பல ஆட்டங்களில் இது தான் நடந்திருக்கிறது என்கிறார் அவர்.

ISL 2019 - Jorge Costa is the hope of Mumbai City FC in semifinals

கோவா ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் கோவாவுக்கு எதிராக 0 - 5 என்ற கோல் கணக்கில் மும்பை அணி தோற்றது இன்னும் கோஸ்டாவை சீற்றமடையச் செய்துள்ளது. இந்த தோல்விக்கு அணி வீரர்களைத்தான் கோஸ்டா குற்றம் சாட்டியுள்ளார். முதல் 20 நிமிடங்களில் நன்றாக விளையாடிய மும்பை அணி வீரர்கள் பின்னர் கோட்டை விட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.

அந்த தோல்விக்குப் பிறகு, மும்பை அணி சாம்பலிலிருந்து எழுந்த பறவையைப் போல் மீண்டெழுந்தது. ஆனாலும் அடுத்த போட்டியில் கோவா அணியிடமே வீழ்ந்தது. அதற்கு முக்கிய காரணம் சில நல்ல வீரர்கள் அணியில் இல்லாததே என்கிறார் கோஸ்டா.

அதனால் அரையிறுதிப் போட்டியில் ஜெயித்து இறுதிப் போட்டியை எட்ட முடியும் என்ற நம்பிக்கை மும்பை அணிக்கு உள்ளது. கோவா அணியை எதிர்த்து விளையாட உள்ள மும்பை அணிக்கு பயிற்சியாளர் கோஸ்டாவின் அணுகுமுறை கண்டிப்பாக வெற்றியை பெற்றுத் தரும்.

(Photos Courtesy - ISL)

Story first published: Wednesday, March 6, 2019, 10:36 [IST]
Other articles published on Mar 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+