Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : கேரளா பிளாஸ்டர்ஸ் மீண்டும் தோல்வி.. எளிதாக வென்ற டெல்லி அணி!!

டெல்லி : டெல்லியில் நேற்று (ஜனவரி 31) நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் டெல்லி அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 65 ஆவது கால்பந்து போட்டி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் டெல்லி டைனமோஸ் எஃப்சி அணிக்கும், கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - Kerala Blasters FC vs Delhi Dynamos FC match no-65 result

ஆட்டம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளின் ஆட்டம் நிதானமாக இருந்தது. போகப் போக ஆட்டம் சூடு பிடித்தது. ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்துக்குப் பிறகு டெல்லி அணி தடுப்பாட்டத்தை ஆடினர்.

இதையடுத்து ஆட்டத்தின் 29 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் ஜியானி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். முதல் பாதியின் முடிவில் கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. அந்த ஒரு நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை.

இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் டெல்லி டைனமோஸ் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ISL 2019 - Kerala Blasters FC vs Delhi Dynamos FC match no-65 result

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. 51 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் லால்ருத்ராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 67 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் பிரசாந்த் வெளியேற்றப்பட்டு சுராஜ் ராவத் களமிறக்கப்பட்டார்.

ஆட்டத்தின் 68 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சிரில் காளிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 69 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் சுபம் சாராங்கி வெளியேற்றப்பட்டு வினித் ராய் களமிறக்கப்பட்டார்.

ISL 2019 - Kerala Blasters FC vs Delhi Dynamos FC match no-65 result

இதைத் தொடர்ந்து 76 மற்றும் 77 ஆவது நிமிடத்தில் கேரளா மற்றும் டெல்லி அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதே போல் 85 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் நெமன்ஜாவுக்கும், டெல்லி அணியின் மார்கோசுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. மேலும் 90 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் லால்ருத்தராவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - Kerala Blasters FC vs Delhi Dynamos FC match no-65 result

இதைத் தொடர்ந்து டெல்லி அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்திக் கொண்ட அந்த அணியின் ரானே மிக்கேலிக் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து டெல்லி அணி 2 -0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Story first published: Friday, February 1, 2019, 11:33 [IST]
Other articles published on Feb 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+