Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : பிளே-ஆப் முன்னேறிய கோவா.. கேரளாவை வீழ்த்தி அசத்தல் வெற்றி!

கோவா : கோவாவில் நேற்று (பிப்ரவரி 18) நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் 3 - 0 என்ற கோல் கணக்கில் கோவா அணி, கேரளா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று நாக் - அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 80 ஆவது கால்பந்து போட்டி கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் எஃப்சி கோவா அணிக்கும், கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற கேரளா அணி இடது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - Kerala Blasters FC vs FC Goa match no 80 Result

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் சிறப்பாக ஆடின. இரு அணிகளுமே கோல் அடிக்க முயற்சி செய்தன. ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஃபெரான் கொராமினாஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் எடு பேடியா ஒரு கோல் அடித்தார். 34 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் லால்ருத்தாரவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - Kerala Blasters FC vs FC Goa match no 80 Result

இதையடுத்து கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. அந்த ஒரு நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்தில் 2 - 0 என்ற கோல் கணக்கில் கோவா அணி முன்னிலை பெற்றது.

ISL 2019 - Kerala Blasters FC vs FC Goa match no 80 Result

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 68 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் மாற்றம் செய்யப்பட்டது. இதே போல் 71 ஆவது நிமிடத்திலும் கேரளா அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

ஆட்டத்தின் 73 ஆவது நிமிடத்தில் கோவா அணியிலும் ஒரு சிறு மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 78 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஹீகோ ஒரு கோல் அடித்தார்.

ISL 2019 - Kerala Blasters FC vs FC Goa match no 80 Result

பின்னர் 79 மற்றும் 82 ஆவது நிமிடங்களில் கோவா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த மூன்று நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கோவா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தற்போது கோவா அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதால் நாக்- அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஏற்கனவே பெங்களூரு அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் தற்போது கோவா அணியும் இரண்டாவதாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Story first published: Tuesday, February 19, 2019, 12:13 [IST]
Other articles published on Feb 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+