For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : கடைசி போட்டியில் கேரளா அணி, நார்த் ஈஸ்ட் அணியை ஜெயிக்குமா?

கொச்சி : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி அதன் சொந்த மண்ணில் இன்று (மார்ச் 1), நார்த் ஈஸ்ட் அணியை ரசிகர்கள் முன்பு ஜெயித்து போட்டியில் இருந்து வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான போட்டி கொச்சி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

கேரளா அணி 14 ஆட்டங்களில் தொடர்ந்து ஒரு போட்டியில் கூட வெற்றி பெறமுடியவில்லை. முதல் போட்டியில் ஏடிகே அணியையும், கடைசியாக நடந்த போட்டியில் சென்னை அணியை 3 - 0 என்ற கோல் கணக்கிலும் வென்றது. மொத்தமாக அந்த அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது அந்த அணிக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக உள்ளது.

ISL 2019 - Kerala Blasters FC vs North East United FC match no 88 preview

முக்கியமான ஆட்டம் நடைபெற உள்ளது. எனக்கு இந்த அணிதான் பயிற்சியாளராக ஒரு வாய்ப்பு கொடுத்தது என்கிறார் நார்த் ஈஸ்ட் அணியின் பயிற்சியாளர் எல்கோ ஷட்டரி. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் நார்த் ஈஸ்ட் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாழ்த்து தெரிவித்தார்.

ISL 2019 - Kerala Blasters FC vs North East United FC match no 88 preview

நார்த் ஈஸ்ட் அணி 17 போட்டிகளில் விளையாடி 28 புள்ளிகளைப் பெற்று தனது பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. ஆனால் மும்பை அணி 30 புள்ளிகளைப் பெற்று நார்த் ஈஸ்ட் அணியைவிட ஒரு படி முன்னிலையில் உள்ளது

வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக எல்கோ ஷட்டரி தனது அணியில் பல மாற்றங்களைச் செய்துள்ளார். தற்போது வரை 5 வீரர்கள் காயமடைந்துள்ளனர். எங்கள் அணியில் 18 வீரர்கள் உள்ளனர். அதில் இரண்டு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் மூன்று முறை மஞ்சள் அட்டை பெற்றுள்ளனர். இதனால் அவர்களால் விளையாட முடியாது. மீதமுள்ள 13 வீரர்களில் 4 பேர் இந்த சீசன் முழுவதும் விளையாடவே இல்லை என்கிறார் எல்கோ ஷட்டரி.

ரூபர்ட் நோங்ரம் மற்றும் ப்ரோவாட் லக்ரா ஆகியோர் தவிர, கோல் கீப்பர்கள் டி.பி. ரெனேஷ் மற்றும் பவன் குமார் ஆகியோர் காயமடைந்துள்ளனர் என்று ஷட்டரி தெரிவித்துள்ளார். ஜோஸ் லுடோ கடைசி ஆட்டத்தில் சிவப்பு அட்டை ஒன்றை எடுத்த பின்னர், 1-1 என்ற கோல் கணக்கில் புனேவுக்கு எதிராக தோற்றது.

ISL 2019 - Kerala Blasters FC vs North East United FC match no 88 preview

கேரளா அணி ஒரு பலவீனமாக அணி என நினைக்கும் எல்கோ ஷட்டரி , அந்த அணியை இலகுவாக வென்று விடலாம் என நினைக்கிறார். முந்தைய போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி பெங்களூருக்கு எதிராக 5 புள்ளிகளை எடுத்தது, நார்த் ஈஸ்ட் அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ISL 2019 - Kerala Blasters FC vs North East United FC match no 88 preview

ஐஎஸ்எல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என நினைத்திருந்த நார்த் ஈஸ்ட் அணிக்கு இது ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

கேரள அணியைப் பொறுத்தவரை ஐஎஸ்எல் போட்டிகள் ஒரு முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அந்த அணியின் பயிற்சியாளர் விங்கடா ஒரு கௌரவமான வெற்றியைப் பெற வேண்டும் என நினைக்கிறார். கேரளா அணி ஜெயிக்குமா?

(Photos Courtesy - ISL)

Story first published: Friday, March 1, 2019, 10:45 [IST]
Other articles published on Mar 1, 2019
English summary
ISL 2019 - Kerala Blasters FC vs North East United FC match no 88 preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+