Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : ஒரு கோல் கூட அடிக்காத கேரளா – நார்த் ஈஸ்ட் அணிகள்.. ஆட்டம் டிரா!!

கொச்சி : 5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 88 ஆவது கால்பந்து போட்டி கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கும் நார்த் ஈஸ்ட் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி இடது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் குர்வீந்தர் சிங்கிற்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - Kerala Blasters FC vs North East United FC match report

ஆட்டத்தின் 27 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 32 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சந்தேசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து 0 - 0 என்ற கோல் கணக்கில் இரு அணிகளுமே சமநிலையில் இருந்தன.

ISL 2019 - Kerala Blasters FC vs North East United FC match report

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 59 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சிரில் வெளியேற்றப்பட்டு மொகமத் களம் இறக்கப்பட்டார்.

ஆட்டத்தின் 66 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 71 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் பவன்குமார் வெளியேற்றப்பட்டு குர்மீத் களம் இறக்கப்பட்டார்.

ISL 2019 - Kerala Blasters FC vs North East United FC match report

பின்னர் 80 ஆவது நிமிடத்தில் கேரள அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 85 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் பிரசாந்திற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கம் கூடுதலாக 8 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

அந்த 8 நிமிடத்திலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கேரளா மற்றும் நார்த் ஈஸ்ட் அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.

Story first published: Saturday, March 2, 2019, 14:13 [IST]
Other articles published on Mar 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+