For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : கோல் மழை பொழிந்த கோவா!! அரையிறுதியில் மும்பையை வீழ்த்தி அபார வெற்றி!!

மும்பை : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது லீக் கால்பந்து ஆட்டத்தில் கோவா அணி 5 - 1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ISL 2019 - Mumbai City FC vs FC Goa Semifinal 2 Result

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது லீக் கால்பந்து போட்டி மும்பையில் உள்ள அரினா அரங்கில் மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும் எஃப்சி கோவா அணிக்கும், இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி இடது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - Mumbai City FC vs FC Goa Semifinal 2 Result

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் மிகச் சிறப்பாக விளையாடின. ஆட்டத்தின் 18 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ரஃபேலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 20 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ரஃபேல் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ஜாய்னருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - Mumbai City FC vs FC Goa Semifinal 2 Result

பின்னர் ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஜாக்கிசந்த் சிங் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின 39 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் மௌர்டாடா ஒரு கோல் அடித்தார்.

ISL 2019 - Mumbai City FC vs FC Goa Semifinal 2 Result

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த இரண்டு நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் எதுவுமே அடிக்கவில்லை. இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் கோவா அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019 - Mumbai City FC vs FC Goa Semifinal 2 Result

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய உடன் 51 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஃபெரான் கொராமினாஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ISL 2019 - Mumbai City FC vs FC Goa Semifinal 2 Result

பின்னர் ஆட்டத்தின் 58 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் மௌர்டாடா மீண்டும் ஒரு கோல் அடித்தார். 63 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் அர்னால்டுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 69 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. 75 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் அகமத் மாற்றப்பட்டு ஹீயுகோ களம் இறக்கப்பட்டார்.

ISL 2019 - Mumbai City FC vs FC Goa Semifinal 2 Result

இதையடுத்து ஆட்டத்தின் 82 நிமிடத்தில் கோவா அணியின் பிராண்டன் ஃபெர்ணாண்டஸ் ஒரு கோல் அடித்தார். பின்னர் இரு அணிகளுக்கும் 5 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அந்த 5 நிமிடத்திலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

ISL 2019 - Mumbai City FC vs FC Goa Semifinal 2 Result

இதையடுத்து கோவா அணி 5 - 1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

(Photos Courtesy - ISL)

Story first published: Sunday, March 10, 2019, 10:34 [IST]
Other articles published on Mar 10, 2019
English summary
ISL 2019 - Mumbai City FC vs FC Goa Semifinal 2 Result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+