For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : பிளே ஆஃப் சுற்றுக்கு கடும் போட்டி.. மும்பை அணி - நார்த் ஈஸ்ட் அணி மோதல்!!

மும்பை : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளின் அரையிறுதி ரேஸில் புள்ளி பட்டியலில் அருகருகே உள்ள மும்பை சிட்டி அணியும், நார்த் ஈஸ்ட் அணியும், மும்பை அரினா அரங்கில் இன்று (பிப்ரவரி 13) மோதுகின்றன.

ஆசிய கோப்பை 2019 க்கு முன்பு பலமாக இருந்த மும்பை அணி அதன்பின் மிகவும் பலவீனமான அணியாக மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். கோவா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்ஜ் கோஸ்டாவின் மும்பை அணி வீரர்கள் இரண்டு தோல்விகளைத் தழுவினர்.

ISL 2019 - Mumbai City FC vs North East United FC match no 75 preview

தற்போது மும்பை அணி 27 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நார்த் ஈஸ்ட் அணி மூன்று புள்ளிகள் குறைவாகப் பெற்று அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த மும்பை அணியின் பயிற்சியாளர் கோஸ்டா, நாங்கள் எங்கள் அணியின் பாணியை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்கிறார். நார்த் ஈஸ்ட் ஒரு சிறந்த மற்றும் உற்சாகம் மிகுந்த அணி என்பதில் சந்தேகமில்லை. மேலும் இந்தியாவின் மிகச் சிறந்த அணிகளுள் ஒன்று. இதனால் நாங்கள் சிறப்பாக ஆட முடிவு செய்துள்ளோம். குறைந்தது மூன்று புள்ளிகளை எடுக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம் என்கிறார் கோஸ்டா.

ISL 2019 - Mumbai City FC vs North East United FC match no 75 preview

மும்பை அணிக்கு இன்னும் மூன்று ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இதற்கு முன்பு ஏடிகே மற்றும் புனே சிட்டி அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியது போல் நுட்பமான சில ஐடியாக்களால் நார்த் ஈஸ்ட் அணியை எதிர்த்து விளையாடி அதிகபட்ச புள்ளிகளை எடுப்போம் என்கிறார் கோஸ்டா.

நார்த் ஈஸ்ட் அணி எல்கோ ஷட்டரியின் கீழ் இந்த சீசனில் விளையாடத் தொடங்கியது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு அவர்களின் ஆட்டம் சோபிக்கவில்லை. ஏனென்றால் கடைசி 7 ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே இந்த அணி பெற்றுள்ளது.

ISL 2019 - Mumbai City FC vs North East United FC match no 75 preview

நார்த் ஈஸ்ட் அணி தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஜாம்ஷெட்பூர் மற்றும் ஏடிகே அணிகள் புள்ளி அட்டவணையில் அடுத்தடுத்து உள்ளன இது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் கடும் போட்டியை ஏற்படுத்தும்.

எல்கோ ஷட்டரி தனது வீரர்களிடம் ஒவ்வொரு நொடியையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார். இந்த சீசன் தொடக்கத்தில் உங்களது மனநிலை எப்படி இருந்ததோ அது போல தற்போதும் இருக்க வேண்டும் என கூறியுள்ளேன் என்கிறார்.

ஜாம்ஷெட்பூர் மற்றும் ஏடிகே அணிகள் மிகக் குறைந்த அளவு புள்ளிகள் வித்தியாசத்தில் இருப்பதால் இந்த ஆட்டத்தில் மூன்று புள்ளிகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என ஷட்டரி தெரிவித்துள்ளார்.

நைஜீரிய ஸ்ட்ரைக்கர் பர்த்தோலோம் ஓக்வெகே மற்றும் உருகுவேயன் டிஃபெண்டர் ஃபெடரிகோ காலிகோ ஆகியோர் இணைந்து நார்த் ஈஸ்ட் அணி பெற்ற 19 கோல்களில் 15 கோல்களைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். அவர்கள் இந்த அணியின் பலம் பொருந்தியவர்கள்.

ISL 2019 - Mumbai City FC vs North East United FC match no 75 preview

டெல்லி டைனமோசுக்கு எதிரான போட்டியில் 1 - 1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு போவதில் அவர்களுக்கு பின்னடைவைத் தந்துள்ளது.

இந்த போட்டி இரு அணிகளுக்குமே இரு புறமும் கருக்குள்ள பட்டயத்தைப் போன்றே உள்ளது. இதில் யார் வெல்கிறார்களோ அவர்களே பிளே ஆஃப் சுற்றைத் தொட முடியும்.

Story first published: Wednesday, February 13, 2019, 16:02 [IST]
Other articles published on Feb 13, 2019
English summary
ISL 2019 - Mumbai City FC vs North East United FC match no 75 preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+