Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : மும்பை அணியை காலி பண்ணிய நார்த் ஈஸ்ட்.. அபார வெற்றி!!

மும்பை : மும்பையில் பிப்ரவரி 13 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 75 ஆவது கால்பந்து போட்டி மும்பையில் உள்ள அரினா அரங்கில் மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும், நார்த் ஈஸ்ட் அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி இடது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - Mumbai City FC vs North East United FC match no-75 result

ஆட்டம் தொடங்கிய 4 ஆவது நிமிடத்திலேயே நார்த் ஈஸ்ட் அணியின் ரௌலின் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து இரு அணிகளும் மிகச் சிறப்பாக விளையாடின. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 33 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்லோமி ஒரு கோல் அடித்தார்.

முதல் பாதியின் முடிவில் கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த மூன்று நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. பின்னர் ஆட்டத்தின் முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019 - Mumbai City FC vs North East United FC match no-75 result

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 56 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ஜோசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 65 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.

69 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மிலன் சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அடுத்து 76 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

ISL 2019 - Mumbai City FC vs North East United FC match no-75 result

பின்னர் 89 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த 5 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து நார்த் ஈஸ்ட் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது.

Story first published: Thursday, February 14, 2019, 10:12 [IST]
Other articles published on Feb 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+