For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : பரபரப்பான அரையிறுதியில் நார்த் ஈஸ்ட் - பெங்களூரு அணிகள் மோதல்!

கவுஹாத்தி : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து அரையிறுதிப் போட்டியில் நார்த ஈஸ்ட் அணி தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்டத்தை ஆட உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக நார்த் ஈஸ்ட் அணி முதல் நான்கு இடங்களுக்குள் வர போராடி வருகிறது. கிட்டதட்ட இரண்டு முறை இதையொட்டி வந்து பின்னர் தோற்றுப் போனது.

தற்போது மற்ற சிறந்த அணிகளுடன் இறுதியாக நார்த் ஈஸ்ட் அணி இணைந்துள்ளது.

ISL 2019 - North East United FC vs Bengaluru FC Semi final match preview

கவுஹாத்தி இந்திரா காந்தி ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் மார்ச் 7 அன்று பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடப் போவதை நினைத்து நார்ட் ஈஸ்ட் அணியின் பயிற்சியாளர் எல்கோ ஷட்டரி தனது காலரை உயர்த்திக் கொள்ளும் அளவுக்கு பெருமையுடன் உள்ளார்.

பெங்களூரு இரண்டாவது ஆண்டாக ஒரு மிகச் சிறந்த அணியாக கருதப்படுகிறது. ஏனென்றால் புள்ளி அட்டவணையில் பெங்களுரு அணி இன்றும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நார்த் ஈஸ்ட் அணி நான்காவது இடத்தில் இருந்தாலும், பெங்களூரு அணியைத் தகர்த்து எறிய தயாராக உள்ளது.

ISL 2019 - North East United FC vs Bengaluru FC Semi final match preview

பெங்களூரு அணி குறித்து கருத்து தெரிவித்த எல்கோ ஷட்டரி. இந்த அணி ஒரு அருமையானது. இந்தியாவிலேயே சிறந்த அணி என்று சொல்லலாம். இத்தகைய அணியுடன் எங்கள் அணி அரையிறுதியில் மோதுகிறது. பெங்களூரு அணியுடன் இரண்டு முறை விளையாடி இருக்கிறோம். அவர்கள் கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் இங்கே வந்துவிட்டார்கள். ஆனால் பெங்களூருவில், நாங்கள்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும், "என்றார் ஷட்டரி.

கடந்த லீக் ஆட்டத்தில் கவுஹாத்தியில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணி வெற்றி பெற்றது. இது போன்றதொரு வெற்றியை மீண்டும் ருசிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார் எல்கோ ஷட்டரி.

ISL 2019 - North East United FC vs Bengaluru FC Semi final match preview

நான் கடந்த 10-12 ஆட்டங்களில் எப்படியாவது அணிக்கு ஒரு முன்னேற்றத்தை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் தொடர்ந்து நான் விரக்தி அடைகிறேன் என்கிறார் ஷட்டரி. எங்களிடம் 16 வீரர்களே உள்ளனர். ஒருவருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் எங்கள் அணிக்கு சில பிரச்சனைகள் உள்ளன. அதனால் எங்கள் அணிக்கு வெற்றி பெற சில வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக எல்கோ ஷட்டரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரை கடந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூருடன் விளையாடி தோற்றாலும் அதைப் பற்றி அந்த அணியின் பயிற்சியாளர் .கார்லஸ் குவாட்ரெட்டுக்கு கவலையில்லை. அதே நேரத்தில் பெங்களூரு அணியினர் அரையிறுதிப் போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் ? என்பதை முன்கூட்டியே தீர்மானித்திருக்கிறார்கள்.

ISL 2019 - North East United FC vs Bengaluru FC Semi final match preview

நார்த் ஈஸ்ட் அணியினர் விளையாட்டில் சில நுட்பங்களை வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்களுக்கு சில பிரச்சனைகள் இருப்பதாகவும் என்னிடத்தில் சொல்கிறார்கள். ஆனால் எங்கள் அணிக்கு நான்கு பிரச்சனைகள் உள்ளது. ஆனாலும் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டு ரசிகர்களிடையே பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 சீசன்களில் நாங்கள் 74 புள்ளிகளைப் பெற்றுள்ளோம். அட்டவணையில் அடுத்த இடத்தில் உள்ள கோவா அணி 64 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆனால் அரையிறுதிப் போட்டியிலோ அல்லது இறுதிப் போட்டியிலோ இந்த புள்ளிக் கணக்கு உதவாது என்கிறார் குவாட்ரெட்.

பெங்களூருவில் மூன்று வெற்றிகளைப் பெற்ற போது நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி கவுஹாத்தியில் பெங்களூரு எப்.சி.க்கு எதிராக ஒருபோதும் வெல்லவில்லை. ஆனாலும் அரையிறுதியில் எந்த அணி வெற்றி வெறும் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

Story first published: Thursday, March 7, 2019, 10:27 [IST]
Other articles published on Mar 7, 2019
English summary
ISL 2019 - North East United FC vs Bengaluru FC Semi final match preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+