Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : வாழ்வா சாவா போராட்டத்தில் நார்த் ஈஸ்ட்டை சந்திக்கும் பெங்களூரு!

பெங்களூரு : பெங்களூரு எஃப்சி அணி சொந்த மைதானத்தில் இதற்கு முன் எத்தனையோ போட்டிகளில் வென்றுள்ளது.

ஆனால் இது எல்லாவற்றையும் விட மிக முக்கிய வெற்றிக்காக திங்கள் இரவில் தங்கள் கோட்டையான ஸ்ரீகண்ட்டீரவா மைதானத்தில் களமிறங்க உள்ளது பெங்களூரு எஃப்சி.

ISL 2019 - North East United FC vs Bengaluru FC Semi final second leg preview

இந்த மைதானத்தில் பெங்களூருவை வெல்ல எதிரணிகள் பல முறை முயன்று புறமுதுகிட்டுள்ளன.

இந்த 2வது லெக் அரையிறுதியில் நார்த் ஈஸ்ட்டிடம் முழு புள்ளி எடுக்கவேண்டிய அவசியத்தில் பெங்களூரு எஃப்சி உள்ளது.

முதல் லெக் அரையிறுதியில் நார்த் ஈஸ்ட்டிடம் பெங்களூரு 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்தது. கடைசி 5 போட்டிகளில் பெங்களூரு ஒரு வெற்றி மட்டுமே பெற்றிருந்தது. 3ல் தோற்று ஒன்றில் டிரா செய்திருந்தது. எனவே இப்போது அந்த அணிக்கு டிரா அல்ல... வெற்றி அவசியப்படுகிறது.

ISL 2019 - North East United FC vs Bengaluru FC Semi final second leg preview

"மிகப் பெரிய போட்டிக்கு நாங்கள் தயார். இம்முறை நாங்கள் காட்டப் போகும் திறமை இந்தாண்டு முழுக்க மறக்கமுடியாத அளவில் ரசிகர்களுக்கு இருக்கும்" என்கிறார் பெங்களூருவின் குவாடர்ட்.

முதல் லெக் அரையிறுதியில் சிஸ்கோ ஃபெர்னாண்டஸ் அடித்த கோல், அந்த அணியை இறுதிக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ISL 2019 - North East United FC vs Bengaluru FC Semi final second leg preview

மிக்கு மற்றும் சுனில் சேத்ரி ஆகியோரை மிகவும் நம்பியுள்ளார் பெங்களூரு பயிற்சியாளர். நார்த்ஈஸ்ட் அணி முதல்முறையாக பிளே ஆஃப்-க்குள் நுழைந்துள்ளது. முதல் லெக் அரையிறுதியில் இந்த அணி சிறப்பான வெற்றியை பெற்றாலும் நட்சத்திர வீரர் பார்த்தலோமியா ஒக்பெச்சை காயத்தால் இழக்க நேரிட்டது.

நடுக்கள வீரர் ரோலின் போர்கசுக்கு ஏற்பட்ட காயமும் நார்த் ஈஸ்ட்டை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஒக்பெச் இல்லாததால் ஃபெடரிகோ கேலகோ-வை நார்த் ஈஸ்ட் மிகவும் நம்பியுள்ளது.

ISL 2019 - North East United FC vs Bengaluru FC Semi final second leg preview

பெங்களூரு எஃப்சி எப்படி ஆடும் என எனக்கு மிக நன்றாக தெரியும். எங்கள் ஆட்டம் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும். கடந்த போட்டியில் முதல் பாதியில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். ஆனால் 2 முக்கிய வீரர்களை இழந்துவிட்டோம். ஆனால் அடுத்த போட்டியில் வாழ்வா சாவா என்ற நிலையில் ஆட உள்ளோம் என்கிறார் பயிற்சியாளர் ஷட்டோரி.

இது உள்ளே - வெளியே பற்றி தீர்மானிக்கும் போட்டி என்பதை இரு பயிற்சியாளர்களும் உணர்ந்தே உள்ளனர்.

இருவரும் தங்கள் துணையை இழந்துள்ளனர். தங்கள் திறமையை வெளிக்காட்டுவதன் அவசியமும் இருவருக்கும் தெரிந்தே உள்ளது

(Photos Courtesy - ISL)

Story first published: Sunday, March 10, 2019, 19:37 [IST]
Other articles published on Mar 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+