Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : நார்த் ஈஸ்ட் அணி பிளே ஆஃப் போகுமா? புனே அணியை வீழ்த்த முடியுமா?

கவுஹாத்தி : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கவுஹாத்தி இந்திரா காந்தி அத்தெலட்டிக் ஸ்டேடியத்தில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற உள்ள போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி புனே சிட்டி அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி புனே அணியை வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

எல்கோ ஷட்டரியின் நார்த் ஈஸ்ட் அணி முதல் நான்கு அணிகளுக்குள் ஒன்றாக இருக்கிறது. இந்த சீசனில் மூன்று போட்டிகளில் அந்த அணி தோல்வி அடைந்துள்ளது. அந்த அணி 16 போட்டிகளில் ஆடி 27 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கடந்த போட்டியில் மும்பை அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெற்ற வெற்றி நார்த் ஈஸ்ட் அணிக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

ISL 2019 - North East United FC vs FC Pune City match no 81 preview

இது குறித்து கருத்து தெரிவித்த நார்த் ஈஸ்ட் அணியின் பயிற்சியாளர் எல்கோ ஷட்டரி, நான் எனது அணி வீரர்கள் குறித்து பேசப்போவதில்லை. கடந்த 10 போட்டிகளில் வீரர்களை அவர்களின் திறமைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.

12 கோல்களுடன் களத்தில் உள்ள நார்த் ஈஸ்ட் அணியின் பர்தலோமி இன்னும் 2 கோல்கள் அடித்தால் ஃபெரான் கொராமினசை சமன் செய்யலாம் எனும் நிலை உள்ளது. நான் ஒவ்வொரு வீரர்களையும் கண்காணித்து வருவதால் தற்போது எங்கள் அணி நல்ல ஃபார்மில் உள்ளது.

ISL 2019 - North East United FC vs FC Pune City match no 81 preview

புனே அணியைப் பொறுத்தவரை இந்த சீசனில் ஒரு மோசமான தொடக்கத்தைக் கொடுத்தது. ஆனால் தற்போது புதிய பயிற்சியாளராக பில் பிரௌன் நியமிக்கப்பட்ட பிறகு நன்றாக விளையாடி வருகிறது. டிசம்பர் மாதத்துக்குப் பிறகு புனே அணி 5 மேட்சுகளில் விளையாடி 4 ல் வெற்றி பெற்றுள்ளது. தற்போது 18 புள்ளிகளைப் பெற்று அட்டவணையில் 7 ஆவது இடத்தில் உள்ளது.

ஆனாலும் பில் பிரௌன் தனது அணி வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என நம்புகிறார். நார்த் ஈஸ்ட் அணிக்கு எதிராக பல புள்ளிகளை எடுக்க வேண்டும் என நினைக்கிறார்.

ISL 2019 - North East United FC vs FC Pune City match no 81 preview

எங்கள் அணி வீரர்கள் எனது விளையாட்டு முறையை நன்கு பின்பற்றுகின்றனர், ஒரு பயிற்சியாளராக இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் பில் பிரௌன்.

ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக கடந்த ஆட்டத்தில் புனே அணியின் தடுப்பாட்டக்காரர் ராபின்சிங் அற்புதமாக விளையாடினார். தற்போது அவர் மற்ற அணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். இதே போல் ஆஷிக் குருனியனும் நல்ல ஃபார்மில் உள்ளார். அதனால் புனே அணி பில் பிரௌன் தலைமையில் அடுத்த வெற்றியையும் பெறும் என நம்புகிறார்.

ISL 2019 - North East United FC vs FC Pune City match no 81 preview

அதே நேரத்தில் தனது சொந்த ரசிகர்கள் முன்பு நார்த் ஈஸ்ட் அணி வீரர்கள் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை தவற விடமாட்டார்கள்.

Story first published: Wednesday, February 20, 2019, 10:01 [IST]
Other articles published on Feb 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+