For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019 : ஆளுக்கு ஒரு கோல்.. நார்த் ஈஸ்ட் – புனே சிட்டி போட்டி டிரா!!

கவுஹாத்தி : கவுஹாத்தியில் நார்த் ஈஸ்ட் மற்றும் புனே சிட்டி அணிகளுக்கு இடையே பிப்ரவரி 20 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 81 ஆவது கால்பந்து போட்டி கவுஹாத்தியில் உள்ள ஜவஹர்லால் நேரு அதெலட்டிக் ஸ்டேடியத்தில் நார்த் ஈஸ்ட் எஃப்சி அணிக்கும், எஃப்சி புனே சிட்டி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற புனே அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019 - North East United FC vs FC Pune City match result

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் மிகச் சிறப்பாக விளையாடின. ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் குர்வீந்தர் சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்து. ஆனால் அந்த அணி அதை நழுவவிட்டது.

ISL 2019 - North East United FC vs FC Pune City match result

இதைத் தொடர்ந்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த இரண்டு நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து முதல் பாதி ஆட்டம் வரை நார்த் ஈஸ்ட் மற்றும் புனே சிட்டி அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றிருந்தது.

ISL 2019 - North East United FC vs FC Pune City match result

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்கியது. பின்னர் 47 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரவுலின் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 53 நிமிடத்தில் புனே அணியின் மார்ட்டினுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 54 ஆவது நிமிடத்தில் புனே சிட்டி அணியின் அடில் கானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தின் 60 மற்றும் 61 ஆவது நிமிடத்தில் புனே அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019 - North East United FC vs FC Pune City match result

இதையடுத்து ஆட்டத்தின் 69 ஆவது நிமிடத்தில் புனே அணியின் அடில் கான் அற்புதமாக ஒரு கோல் அடித்தார், இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 70 மற்றும் 71 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019 - North East United FC vs FC Pune City match result

பின்னர் மீண்டும் 77 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 88 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ஜோஸ் லுடோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அப்போது நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்தலோமிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை நழுவி விட்டார்.

ISL 2019 - North East United FC vs FC Pune City match result

இதையடுத்து ஆட்டத்தின் 89 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ஜோஸ் லுடோவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019 - North East United FC vs FC Pune City match result

இதையடுத்து இரு அணிகளுக்கும் கூடுதலாக நான்கு நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த நான்கு நிமிடத்திலும் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து நார்த் ஈஸ்ட் மற்றும் புனே அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டம் 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ISL 2019 - North East United FC vs FC Pune City match result
Story first published: Thursday, February 21, 2019, 12:25 [IST]
Other articles published on Feb 21, 2019
English summary
ISL 2019 - North East United FC vs FC Pune City match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+