For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ISL 2019 : கோல்டன் குளோவ் விருது யாருக்கு? முட்டி மோதும் குர்பிரீத் சிங் - அம்ரீந்தர் சிங்!!

மும்பை : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் கோல்டன் குளோவ் விருதைப் பெறுவதற்காக குர்பிரீத் சிங்கிற்கும், அம்ரீந்தர் சிங்கிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

பல கண்கள் தற்போது கோவா அணியின் ஃபெரான் கொரோமினாஸ் நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்தோலோம் ஓக்பேச், அண்மையில் ஹாட்ரிக் கோல் அடித்த மும்பை சிட்டி அணியின் ஹீரோ மொடுகு சோகு ஆகியோர் மீது விழுந்துள்ளது.

ISL 2019 - Who will win the Golden Glove award of this season?

இவர்களுக்குள் அதிக கோல் அடித்தவர்கள் யார் என்ற போட்டி எழுந்துள்ளது. அதே நேரத்தில் சிறந்த கோல் கீப்பர்களுக்கான போட்டி கூட இன்னும் புதிரானதாக இருக்கிறது.

தற்போது பெங்களூரு அணியின் கோல் கீப்பர் குர்பீரித் சிங் இந்தப் போட்டியில் முதன்மை பெற்றுள்ளார். ஐஎஸ்எல் போட்டிகளுக்காக பெங்களூரு அணியில் விளையாடும் இவர், சிறந்த கோல் கீப்பருக்கான போட்டியில் முதல் மூன்று இடங்களில் இடம் பெற்றுள்ளார்.

ISL 2019 - Who will win the Golden Glove award of this season?

குர்பீரீத் சிங் பெங்களூரு அணிக்காக 1530 நிமிடங்கள் விளையாடியுள்ளார். அவருக்கு இணையாக ஏடிகே அணியின் கோல் கீப்பர் அரிந்தம் பட்டாச்சார்யா விளையாடியுள்ளார். ஆனால் தற்போது குர்பீரீத் சிங்கிற்கும் மும்பை அணியின் கோல் கீப்பர் அம்ரீந்தர் சிங்கிற்கும் இடையேதான் போட்டி.

அம்ரீந்தர் சிங்கைப் பொறுத்தவரை மும்பை அணி வெறும் 16 கோல்களை சராசரியாக 89.56 நிமிடங்களில் விட்டுக் கொடுத்துள்ளது. இதன் மூலம் அம்ரீந்தர் சிங்கைப் அந்த அணியைக் காப்பாற்றியுள்ளார். 25 வயதான இவரின் கோல் கீப்பிங் இந்த சீசனில் மிகச் சிறப்பாக இருந்தது. பஞ்சாப் மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட அம்ரீந்தர் சிங், மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

ISL 2019 - Who will win the Golden Glove award of this season?

குர்பீரீத் சிங்கைப் பொறுத்தவரை கால்பந்து வரலாற்றிலேயே அதிமாக ஊதியம் பெறும் இந்திய கோல் கீப்பராக விளங்குகிறார். மேலும் இவர் தனது சிறப்பான ஆட்டத்தால் அனைத்து ஐரோப்பிய ரசிகர்களையும் நல்ல முறையில் பயன்படுத்துகிறார். டெல்லி டைனமோஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி விளையாடும்போது குர்பிரீத் சிங் தனது சிறப்பாக கோல் கீப்பீப்ங்கால் 3 கோல்களை பாதுகாத்தார்.

குர்பீரீத் சிங் இந்த சீசனில் இது வரை 55 கோல்களைக் காப்பாற்றியுள்ளார். பெங்களூரு அணிக்காக பல முறை அவர் தன்னந்தனியாக கோல்களை காப்பாற்றியதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஐஎஸ்எல் புள்ளி விவரங்களின்படி, குர்பிரீத் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கும் ஒரு கோலை காப்பாற்றியுள்ளார். அம்ரீந்தர் சிங்கைப் பொறுத்தவரை ஒவ்வொரு 89.56 நிமிடத்துக்கும் ஒரு கோலை காப்பாற்றியுள்ளார்.

ISL 2019 - Who will win the Golden Glove award of this season?

இந்த பட்டியலில் மூன்றாவது கோல் கீப்பர் பவன் குமார் என்பவர், எல்கோ ஷட்டரியின் நார்த் ஈஸ்ட் அணிக்காக முதல் முறையாக விளையாடியுள்ளார்.

பவன்குமாரைப் பொறுத்தவரை இதுவரை 52 கோல்களைக் காப்பாற்றியுள்ளார்.அவரால் நார்த் ஈஸ்ட் அணி நல்ல பலன் பெற்றுள்ளது.

இந்த கோல் கீப்பர்கள் ஐஎஸ்எல் சீசனில் தங்களது ஆட்டத்தால் கோல்கள் காப்பாற்றப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது பிளே ஆஃப் சுற்று நடைபெறவுள்ள நிலையில் கோல் கீப்பரின் பங்கு முக்கியமானது.

(Photos Courtesy - ISL)

Story first published: Tuesday, February 26, 2019, 16:01 [IST]
Other articles published on Feb 26, 2019
English summary
ISL 2019 - Who will win the Golden Glove award of this season?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X